உயிர் மூச்சு திரைப்படம் உலகளாவிய திரைப்படமாக மாறப்போகிறது மனிதனாய் பிறந்த அனைவருக்கும் பொழுதுபோக்கு மிகவும் அவசியம்…

இந்த 21ம் நூற்றாண்டில் சினிமா என்ற பொழுதுபோக்கில் ஏதோ ஒரு வகையில் தானும் இணைந்திருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணுவது இயல்பு…

ஒரு சிலருக்கு சிறிய வயதிலேயே இந்த சினிமா கனவு நிறைவேறி விடுகிறது ஆனால் ஒரு சிலருக்கு 50 வயதிலேயேயோ 60 வயதிலேயோ தான் இந்த சினிமா கனவு நிறைவேறுகிறது… அதுவும் எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை… ஒரு சிலருக்கு அது கனவாகவே முடிந்து விடுகிறது….

அந்த வகையில் *உயிர் மூச்சு என்ற திரைப்படத்தில் ஒரு சில நபர்களின் கனவு நிறைவேறி இருக்கிறது…

குறிப்பாக அத்தி மரப்பட்டி விவசாயி ஜோதிமணி அவர்களின் எண்ணத்தில் உதித்த கதை ஒன்று திரை காவியமாய் சினிமாவாக விரைவில் வர இருக்கிறது…

வயது என்பது வெறும் எண்கள் தான் கலைக்கு என்றுமே வயது ஆவதில்லை…

தனது அனுபவத்தில் இன்றைய காலகட்ட தலைமுறையினருக்கு தேவையான முதலுதவி, மதுபானத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாக வைத்து விவசாயி ஜோதிமணி அவர்கள் ஒரு கதையை வடிவமைத்து அதற்கு வசனம் எழுதி மக்கள் ரசிக்கும்படி அதை மெருகேற்றி ஒரு முழு நீள திரைப்படமாக மக்களுக்காக உருவாக்கியிருப்பது பாராட்டக்கூடிய ஒரு விஷயமாகும்…

கதைக்குத் தேவையான இடங்களில் நான்கு பாடல்கள் கதையை விறுவிறுப்பாக்குகிறது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்னேஷ் கதாநாயகி சஹானா ஆகியோரின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது…

நடிகர் டெலிபோன் ராஜ் தமிழ் திரை உலகில் முதன்முறையாக வில்லனாக உயிர் மூச்சு திரைப்படத்தில் அதகளப்படுத்தி இருக்கிறார்…

நடிகர்கள் மீசை ராஜேந்திரன், தனக்கே உரிய அதிகார பாணியில் சிறப்பாக நடித்திருக்கிறார்..

நடிகர் பெஞ்சமின் நடிகை தீபா ஆகியோர் நடித்திருக்கும் காட்சிகள் திரைப்படத்தை விருவிருப்பாக்குகிறது ..

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடிகள் அனைத்தும் நடிகர் கிங் காங் எழுதிவையாகும்…

கிளைமாக்சில் வரும் வாடி பெண்ணே.. வாடி பெண்ணே பாடலில் கருப்பு பக்கம் திரைப்படத்தின் கதாநாயகன் ராஜ்கபூர் தனது முழு நடிப்பு திறமையை காட்டி இருக்கிறார்…

சுமங்கலி சதீஷ், மாரிமுத்து, நெல்லை சேகர், கழுங்கை காந்தி, கோல்டு சின்னா,டாக்டர் வி பி எம் , R.ஜெயம் ஆகியோரின் நடிப்பு கண்டிப்பாக மக்களிடையே பேசப்படும்…

ராஜகுமாரி மற்றும் லலிதா ஆகியோரின் நடிப்பு கண்டிப்பாக மக்களிடையே அனுதாபத்தை வாங்கும்…

விவசாயி ஜோதிமணி ஒரு காட்சியில் நடித்திருந்தாலும் நாட்டு நடப்பை சரியாக திரையில் பேசியிருக்கிறார்..

ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் கேமராவை சரியாக கையாண்டு இருக்கிறார்.. வயல்கள் மற்றும் உப்பளங்களை திரையில் பிரமிப்பாக காட்டியிருக்கிறார்..
இசையமைப்பாளர்,
இயக்குனர்,
பிராட்வே சுந்தர்

உயிர் மூச்சு திரைப்படத்தை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் இன்றைய காலகட்டத்திற்கு மக்களுக்கு தேவையான கருத்துடன் கூடிய காவியமாய் உருவாக்கியதில் அத்திமரப்பட்டி விவசாயி ஜோதி மணி ஜெயித்துவிட்டார்… மெர்சி ஜோதிமணி தயாரித்த இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெறும் என்று பல தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

தணிக்கை அதிகாரிகள் உயிர் மூச்சு திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழை வழங்கி இருக்கிறார்கள்..

உயிர் மூச்சு திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *