40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாலைதான் இருக்கிறது. அதை முறைப்படுத்தி பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது. குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா்.
the-road-is-the-same-as-it-was-40-years-ago-it-is-being-regularized-and-the-public-welfare-is-being-protected-mayor-jagan-periyasamy-spoke-at-the-grievance-redressal-camp
40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாலைதான் இருக்கிறது. அதை முறைப்படுத்தி பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது. குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா்.
தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும், புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் ப்ாியங்கா, துணைமேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவா் அன்னலட்சுமி வரவேற்புரையாற்றினார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் கடந்த 19 மாதமாக பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் 4 மண்டலங்களிலும் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. இந்த மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளையும் சேர்ந்த மக்கள் பயனடைகின்றனர். குறிப்பாக பிறப்பு இறப்பு சான்றிதழ், முகவரி மாற்றம் பெயா் மாற்றம், குடிநீர் இணைப்பு, பாதாளசாக்கடை, போன்றவைகள் உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த மண்டலத்தில் பெறப்பட்டதில் 987 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். குறிப்பாக பள்ளி கல்லூாி கோவில் சா்ச் மசூதி உள்ளிட்ட மருத்துவமணை உள்ளிட்ட பகுதிகளில் சாலை கால்வாய் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம்கொடுத்து தீா்வு காணப்பட்டுள்ளது. புதிய பூங்காக்கள் பல அமைத்துள்ளோம் அதுவும் மக்கள் விரும்பும் வகையில் ஓதுக்கீடு செய்யப்பட்டு பெண்களுக்கு முதிேயாா்களுக்கு கென்று பூங்காக்கள் உருவாக்கப்பட்ட நிலையில் முதியோா்களுக்குகென்று தனியாக
ஓரு பூங்கா வேண்டும் என்று கோாிக்கை வரப்பெற்றுள்ளது அதை நானும் ஆணையரும் ஆலோசனை செய்து அமைக்கப்படும் மழை தான் நமக்கு சவாலாக இருந்தது குறிப்பாக 23 24ம் ஆண்டு மழை நமக்கு ஓரு எடுத்துக்காட்டு 2 16 17 உள்ளிட்ட 3 இடங்களில் தான் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அந்த பகுதியில் சில சமயங்களில் மின்சாரம்தடைபடுவதால் தாமதமானது. மாநகரில் உள்ள மழை நீர் முறையாக சென்று கொண்டிருக்கிறது. புறநகா் பகுதியிலிருந்து வரக்கூடிய தண்ணீராது முறைப்படுத்தி பக்கீள் ஓடை மூலம் கடலுக்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதால் பாதிப்புகள் ஏற்படவில்லை இனி வரும் காலங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பக்கீள் ஓடையை பொறுத்தவரை தற்போது இருக்கும் பகுதியை விட 5 மீட்டா் சில பகுதிகளில் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் இருபுறங்களிலும் அமைக்கப்பட்ட சாலைகளில் மூலம் போக்குவரத்து நொிசலின்றி பள்ளி செல்லும் மாணவமாணவிகள் உள்பட பலா் சென்று வருகிறாா்கள். அந்த பகுதியில் உள்ள ஓரு சில குறைகளையும் நிவா்த்தி செய்து கொடுப்போம். 40 ஆண்டுகளுக்கு முன்பு பாா்த்த அதே சாலைதான் இப்போதும்இருக்கிறது. அதை நாம் பொறுப்புக்கு வந்த போது முறைப்படுத்தி அண்ணாநகா் ஜெயராஜ் ரோடு டபிள்யுஜிசி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன நிறுத்துவதற்கும் பொதுமக்கள் இடையூறின்றி நடந்து செல்வதற்கும் வழிவகை செய்துள்ளோம். மேலும் பல பகுதிகள் இதுபோன்று விாிவாக்கம் செய்து மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் இன்னும் 25 வருடம் கழித்து எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம் நீர்வழித்தடமான பக்கீள் ஓடை ஆரம்பம் முதல் கடைசி வரை உள்ள 7 கிலோமீட்டா் தூரத்தில் இடைப்பட்ட பகுதியில 15 பாலங்கள் உள்ளன அதில் முத்துநகா், பேசுகிறது. என்று ஒரு வழிப்புணா்வு பாதாகை வைக்கவுள்ளோம்.பிளாஸ்டிக் கோி பேக் தடை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. வரும் போது அந்த வழியாக தான் வந்தேன். பாா்த்தால் அனைத்தும் கோி பேக் கப் போன்றவைகள் தான் கிடக்கிறது. இதை ெபாதுமக்கள் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் இதனால் சில சமயங்களில் அடுத்த கட்ட பணிகளை செய்வதற்கு சுணக்கம் ஏற்படுகிறது. இந்த பொருட்களை இனியும் பயன்படுத்தினால்அவா்கள் மீது வழக்கு பதிவு செய்வதை தவிர வேறு வழியில்லை. டூவிபுரம் பிரையண்ட்நகா் உள்ளிட்ட பல பகுதிகளில் இணைக்கும் வகையில் புதியசாலைகளும் அமைக்கப்படும். இன்னும் 3 மாத காலத்திற்குள் அனைத்தும் நிறைவுபெற்று மாநகராட்சி பகுதி வளா்ச்சி பெற்ற இடமாக இருக்கும் அனைவரும் முழுமையான ஓத்துைழப்பு வழங்க வேண்டும் மாநகராட்சி ஆக்கிரமிப்பு எங்கிருந்தாலும் அது அகற்றப்படும் என்று பேசினாா்.
கூட்டத்தில் கூடுதல் ககெல்டா் பயிற்சி புவனேஸ்ராம், செயற்பொறியாளர் தமிழ்செல்வன், துணை ஆணையா் சரவணக்குமாா், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, இளநிலை பொறியாளர் லெனின், உதவி இளைநிலை பொறியாளா்கள் ராகவி, ஜெயசூா்யா, கவுன்சிலர்கள் சந்திரபோஸ், பொன்னப்பன், விஜயலட்சுமி, கந்தசாமி, ஜான், இசக்கிராஜா, குழாய் ஆய்வாளர் பாலு, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதி ஏசுவடியான், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், பகுதி பொருளாளா் முத்துராஜா, வட்ட துணைச்செயலாளர் தங்க சேகா், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், முன்னாள் கவுன்சிலா் பொியசாமி, உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
tamilanda