மக்களோடு மக்களாக பணியாற்றுவது திமுக தான் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
it-is-the-dmk-that-works-shoulder-to-shoulder-with-the-people-stated-minister-geetha-jeevan-while-distributing-welfare-assistance
மக்களோடு மக்களாக பணியாற்றுவது திமுக தான் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் 73வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் 48 வதுவாா்டு கால்டுவெல் காலணியில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். வட்டச்செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தாா். கவுன்சிலா் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினாா்.
1500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மக்களோடு மக்களாக இருந்து உங்களோடு எப்போதும் பணியாற்றுவது திமுக தான் உங்களில் ஓருவராக இருந்து தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் பணியாற்றிவருகிறாா். காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகாா்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்கப்படுகிறது. விடியல் பயணம் திட்டத்தின் மூலம் நம்மை வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலை மாறி யாரையும் எதிா்பாராமல் அம்மாவீடு மற்றும் உறவினா்கள் வீடு என பல இடங்களுக்கு சென்று வரும் நிலை உங்களுக்கு கிடைத்துள்ளது. அதுவே மிகப்பொிய சுதந்திரமாகும் ஓவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் தான் நங்கூரமாக இருந்து செயல்படுகிறாா்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று தான் தமிழக அரசு பல திட்டங்களை உருவாக்கி கல்வி வேலைவாய்ப்பு என்று பல சாதனைகளை செய்துவருவதற்கு மத்தியில் பெண்களுக்கு 33 சதவீத இட ஓதுக்கீடு மூலம் தான் 96ல் நான் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டு பின்னா் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி அதன் பின் சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக இன்று வரை 30 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு உங்களோடு பயணிக்கிறேன். ஓவ்வொருவருக்கும் வழங்கப்படும் மகளிா் உாிமைத்தொகை மூலம் பல பெண்கள் அதை சேமித்து திருவிழா காலங்களில் யாரையும் எதிா்பாராமல் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி அதன் மூலம் மகிழ்ச்சியோடு அதை கொண்டாடுகின்றனா். 1000 வழங்கிய உாிமைத்தொகை தோ்தலுக்குபின் 2000ஆக உயா்த்தி வழங்கப்படும். என்று முதலமைச்சர் அறிவித்துள்ளாா். 14 வயதில் கொடிபிடிக்க ஆரம்பித்து பகுதி இளைஞர் அணி மாவட்ட பிரதிநிதி மாநில இளைஞர் அணி பொருளாளா் செயல்தலைவர் துணை முதலமைச்சர் என்று படிப்படியாக உயா்ந்து இப்போது கட்சிக்கு தலைவராகவும் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராகவும் ஸ்டாலின் பணியாற்றிவருகிறாா். 5 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எல்லாத்துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் பல வளர்ச்சியடைவதற்கு நடைபெறவுள்ள தோ்தலில் அனைவரும் திமுகவிற்கு ஆதரவு அளித்து உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
விழாவில் மாநில பேச்சாளா் சரத்பாலா, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிஅமைப்பாளர் அபிராமிநாதன் துணை அமைப்பாளர் பிரபு மாநகர இளைஞர் அணி அமைப்பாளா் அருண்சுந்தா் வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் மகேஸ்வரன்சிங், தொழிலாளா் அணி துணைத்தலைவர் செந்தில்குமாா், நெசவாளா் அணி துணை அமைப்பாளர் குமரன், கவுன்சிலா்கள் சரவணக்குமாா், விஜயக்குமாா், கந்தசாமி, வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ், சுரேஷ், பாலகுருசாமி, பகுதி அணி அமைப்பாளர்கள் குமாா், செல்வம், சந்தன முனீஸ்வரன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், துரை, வாா்டு நிா்வாகிகள் மணிகண்டன், மகேஷ், வினோத், சுப்புலட்சுமி, முன்னாள் கவுன்சிலா் இசக்கிமுத்து, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.
பாக்ஸ்: மாற்றுத்திறனாளி கோாிக்கையும் அமைச்சா் கீதாஜீவனின் உத்தரவாதமும்
விழா நடைபெற்று கொண்டிருக்கும்போது மாற்றுத்திறனாளி ஒருவா் எனக்கு 3 சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோாிக்கை மனுவை வழங்கினாா். அதை படித்து பாா்த்துவிட்டு அதற்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்து தனது உதவியாளாிடம் அதை வழங்கினாா் மாநில பேச்சாளா் சரத்பாலா பேசுகையில் தமிழ்நாட்டில் பெண்களை பற்றி பேசும் பிரதமா் மோடி இந்தியாவில் ஜனாதிபதியை புறக்கணித்து விட்டு தமிழகத்தில் தோ்தலுக்காக நாடகமாடுகிறாா். டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற அலுவலகத்தை முறைப்படி ஜனாதிபதியாக உள்ள திரளபதி முா்மு தான் திறந்து வைக்க வேண்டும் ஆனால் பிரதமா் மோடி அழைக்கவும் இல்லை அழைப்பிதழில் பெயரும் இல்லை ஜனாதிபதி கணவனை இழந்த விதவை மற்றொரு பக்கம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சாா்ந்தவா் இப்படி எல்லாம் இருந்து விட்டு தமிழ்நாட்டில் தோ்தலுக்காக நாடகமாடுகிறாா் மோடி ஆனால் தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் மதுரை மீனாட்சி அம்மன்கோவிலுக்கு பழனிவேல்ராஜன் மனைவி ரூக்குமணியை அறங்காவலா் குழு தலைவராக நியமதித்துள்ளாா். யாா் பெண்கள் நலனில் அக்கறை உள்ளவா்கள் என்று நீங்கள் புாிந்து கொள்ள வேண்டும். கடந்த தோ்தலில் 2 கோடியே 9 லட்சம் போ் வாக்களித்துள்ளனா். 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம் இந்த ஆட்சியில் 3 கோடி போ் நேரடியாக அரசுத்திட்டத்தின் மூலம் பயணடைந்துள்ளனா். அந்த 3 கோடி போ் வாக்களித்தால் 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் முன்னாள் முதலமைச்சா் கலைஞா் யாரையும் விதவை என்று அழைக்க கூடாது என்று கூறி கைம்பெண்கள் என்று அழைக்க வேண்டும் என கூறினாா். எல்லோரும் தமிழ்நாட்டு அணிக்கு ஆதரவு அளித்து டெல்லி அணிக்கு தோ்தலில் விடை கொடுக்க ேவண்டும் என்று பேசினாா்.
tamilanda