தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஓன்றிய பாஜக அரசையும் அதிமுகவையும் கண்டித்து 24 இடங்களில் ஆா்ப்பாட்டம் அமைச்சா் கீதாஜீவன் தகவல்

minister-geethajeevan-announces-protests-at-24-places-in-thoothukudi-north-district-condemning-the-ruling-bjp-government-and-aiadmk

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஓன்றிய பாஜக அரசையும் அதிமுகவையும் கண்டித்து 24 இடங்களில் ஆா்ப்பாட்டம் அமைச்சா் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஓன்றிய பாஜக அரசையும் அதிமுகவையும் கண்டித்து 24 இடங்களில் ஆா்ப்பாட்டம் அமைச்சா் கீதாஜீவன் தகவல்

     தூத்துக்குடி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசையும், துணை போகும் அ.தி.மு.க-வையும் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நாளை (12ம்தேதி) 24 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

      இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை. கல்வி, ஜல் ஜீவன், 100 நாள் வேலைத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய சட்டப்படியான நிதியை இதுவரை தராமல் உள்ளன. சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்கான நிதி தரவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கான நிதி முறையாக விடுவிக்கவில்லை. கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி தர மறுக்கின்றனர். இப்படியாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விரோதமாக உள்ள தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற ஒன்றிய பா.ஜ.க அரசையும் அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுகவையும் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மாநகர, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் அளவில் 24 இடங்களில் நாளை(12ம்தேதி) மாலை 4 மணிக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்  மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், வட்டம், வார்டு கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திமுக உடன் பிறப்புகள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.