தூத்துக்குடி கடலில் மூழ்கிய விசைப்படகு 40 லட்சம் இழப்பு 9 போ் பத்திரமாக கரைசோ்ந்தனா்.

boat-capsizes-in-thoothukudi-sea-causing-loss-of-rs-40-lakhs-9-people-safely-washed-ashore

தூத்துக்குடி கடலில் மூழ்கிய விசைப்படகு 40 லட்சம் இழப்பு 9 போ் பத்திரமாக கரைசோ்ந்தனா்.

தூத்துக்குடி கடலில் மூழ்கிய விசைப்படகு 40 லட்சம் இழப்பு 9 போ் பத்திரமாக கரைசோ்ந்தனா்.

      தூத்துக்குடி புது தெருவை சேர்ந்த சுபாஷ் இவருக்கு சொந்தமான விசைப்படகு உள்ளது இந்த விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றது இந்த நிலையில் நேற்று முன்தினம் சுபாஷுக்கு சொந்தமான விசைப்படகில் 9 பேர் அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் .மீன்பிடித்து விட்டு இரவு கரைக்கு திரும்பி கொண்டு இருந்தனர் அப்போது தூத்துக்குடியில் இருந்து 16 மைல் தொலைவில் வரும் போது விசைப்படகு எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த பகுதி அருகே திடீரென்று விசைப்படகில் ஓட்டை விழுந்தது இதனால் விசைப்படகுக்குள் கடல் நீர் சலசலவென பஉள்ளே புகுந்துள்ளது உடனடியாக மீனவர்கள் படகில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க முயற்சி செய்தனர் ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை இதனால் விசைப்படகு தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் படகிலிருந்து கடலில் குதித்து தத்தளித்து கொண்டிருந்தார்கள் அப்போது அந்தவழியாக வந்த மற்ற விசைப்படகுகள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 9 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு விசைப்படகு மூலம் கயிறு கட்டி கடலில் மூழ்கிய விசைப்படகை இழுத்துக் கொண்டு வந்தனர். சுமார் 3 மைல் தூரம் வரை இழுத்து வந்த போது அந்த விசைப்படகு  முழுவதும் கடலில் மூழ்கியது. கடலில் மூழ்கிய விசைப்படகை அங்கேயே விட்டுவிட்டு கடலில் தத்தளித்த ஒன்பது மீனவர்களையும் மற்ற விசைப்படகு மூலம் பத்திரமாக கரைக்கு மீட்டு வந்தனர் இதுதொடர்பாக உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீன் பிடித்துறை அதிகாரிகளுடன் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் மீன் பிடித்துறை அதிகாரிகள் உத்தரவின் பெயரில் கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர் இதனைத் தொடர்ந்து மீண்டும் கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்பதற்கான நடவடிக்கையை மீன்பிடித் துறைமுக அதிகாரிகள் மற்றும் விசைப்படகு பணியாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர் கடலில் மூழ்கிய விசைப்படகு 30 லட்சம் ரூபாய் மதிப்பும் படகில் இருந்த மீன் சுமார் ஒரு லட்சம் உள்ளிட்ட உபகரணங்கள் சேர்த்து மொத்தம் 40 லட்ச ரூபாய் இருக்கும் என்று தெரிய வருகிறது.