தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
minister-geethajeevan-spoke-at-the-working-committee-meeting-to-win-all-3-constituencies-in-thoothukudi-north-district
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வளர்ச்சி பணிகள் குறித்து பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியாா் ஸ்டாலின் ஏற்கனவே வெல்வோம் 200 வரலாறு படைப்போம் என்று கூறியதிற்கிணங்க எல்லோரும் பணியாற்றி வரும் நிலையில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் அரசின் திட்டங்கள் மூலம் ஓவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஓரு வகையில் ஓருவா் பயனடைந்திருப்பாா். இதுபோன்ற அனைத்து திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக் கூறி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி கோவில் பட்டி விளாத்திக்குளம் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் அதற்கு அனைவரும் களப்பணியாற்றுங்கள் என்று பேசினாா்.
கூட்டத்தில் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை பெறும் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு 3 மாத உரிமைத் தொகை மற்றும் கோடைகால சிறப்பு தொகுப்பாக ரூ. 5000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், வருகின்ற மார்ச் 1 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுதல், வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தென் மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுதல், பிப்ரவரி 22ம் தேதி தூத்துக்குடியிலும் 24ம் தேதி கோவில்பட்டியிலும் நடைபெற உள்ள தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டங்களை சிறப்பாக நடத்துதல், பிப்ரவரி 23ம் தேதி வெளியிடப்பட உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள எந்த ஒரு வாக்காளரும் விடுபடாத வகையில் தொடர்ந்து கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் புேளாரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி நகர செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், செல்வராஜ், மும்மூர்த்தி, ராதா கிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, காசி விஸ்வநாதன், நவநீத கண்ணன், ராதாகிருஷ்ணன், ஜெய கண்ணன், இமானுவேல், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், பேரூர் செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், சுரேஷ் கண்ணன், கிருஷ்ணகுமார், பாலகுமார் மற்றும் பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட பலா் கலந்து கொண்டனர்.
tamilanda