மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 5000 வழங்கிய தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சி. எஸ். முரளிதரன் வரவேற்பு

former-thoothukudi-metropolitan-district-congress-president-c-s-muralitharan-welcomed-the-tamil-nadu-governments-move-to-provide-rs-5000-to-the-bank-accounts-of-womens-rights-beneficiaries

மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 5000 வழங்கிய தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு  தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சி. எஸ். முரளிதரன் வரவேற்பு

மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 5000 வழங்கிய தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு  தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சி. எஸ். முரளிதரன் வரவேற்பு

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு இந்த ஆட்சியில் அதி முக்கியத்துவம் கொடுத்து வருவது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆணுக்குப் பெண் சமம் என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்து செயல்படுகிற அரசு திராவிட மாடல அரசு. திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை, திட்டங்களை இந்த ஐந்தாண்டு ஆட்சியில் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்து உள்ளார்கள். 

விடியல் அரசு பயணம், மானிய விலையில் இருசக்கர வாகனம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தாராளமான உதவி, இப்படியாக அதிக திட்டங்களை தமிழக அரசு பெண்களுக்கு வழங்கி வருகிறது. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வர இருக்கிற நேரத்தில் ஒன்றிய அரசினால் மகளிர்க்கு கிடைக்க வேண்டிய உரிமை தொகை தடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தோடு தாயுள்ளம் கொண்ட தாயுமானவர் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஒவ்வொரு  பயனாளிகளுக்கும் அவர்களது வங்கி கணக்கில் இன்று காலை முதல் ரூபாய் 5000 வழங்கி வருவது மிகவும் சிறப்பான ஒன்று. இதனால் ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் பயனடைகிறார்கள். இதனால் அந்த குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்து உள்ளார்கள். 

 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!

1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது, வரவேற்கிறது. வாழ்த்துகிறது.

இவ்வாறு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சி. எஸ். முரளிதரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.