வான்கோழி மயிலாக முடியுமா? சினிமாவில் 10 பேரை விஜய் அடிப்பார். அதனால் அவரை பார்க்க தான் மக்கள் வருகிறார்கள். நடிகராகவே அவரை பார்க்கின்றனர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த செல்ல பாண்டியன் பேட்டி

can-a-turkey-become-a-peacock-vijay-will-beat-10-people-in-cinema-thats-why-people-come-to-see-him-they-see-him-as-an-actor-interview-with-former-minister-ct-chella-pandian-in-thoothukudi

வான்கோழி மயிலாக முடியுமா? சினிமாவில் 10 பேரை விஜய் அடிப்பார். அதனால் அவரை பார்க்க தான் மக்கள் வருகிறார்கள். நடிகராகவே அவரை பார்க்கின்றனர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த செல்ல பாண்டியன் பேட்டி

வான்கோழி மயிலாக முடியுமா? சினிமாவில் 10 பேரை விஜய் அடிப்பார். அதனால் அவர் கால்களை பார்க்க தான் மக்கள் வருகிறார்கள். நடிகராகவே அவரை பார்க்கின்றனர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்

சர் சி.த செல்ல பாண்டியன் பேட்டி

    தூத்துக்குடி மாநில அதிமுக வர்த்தக அணி அலுவலகம் புதிய கட்டிடம் டூவிபுரத்தில் திறப்பு விழா நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லபாண்டியன் தலைமை தாங்கி திறந்து வைத்தாா்.  

    பின்னா் சி.த.செல்லபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 2026ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் பொதுதேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார். முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை 5000 ரூபாய் அவரவர் வங்கிகளில் ஏற்றப்பட்டுள்ளது அதில் 2000 ரூபாய் கோடைகால உதவித்தொகை என்று கூறியுள்ளார் நான்கு வருடம் கோடை காலம் வரவில்லையா மக்களின் ஆதரவோடு மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி யார் பதவி ஏற்பார். மக்களின் வரிப்பணத்தை தமிழக முதலமைச்சர் தவறாக பயன்படுத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமி மக்கள் பயணம் வரும் போது மக்களிடம் நல்ல எழுச்சி இருந்தது மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 2000 ரூபாய் என்று அதிமுக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார் அனைவருக்கும் வீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார் ஆனால் இன்று வரை ரத்து செய்யப்படவில்லை ஆனால் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். வருடத்திற்கு தாய்மார்களுக்கு மூன்று சிலிண்டர் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது திரேஸ்புரம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் பாலம் அமைத்தார்கள் அந்தப் பாலம் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது மீனவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்  அதனால் கடல் அரிப்பு ஏற்படுகிறது படகு சேதம் அடைகிறது. தமிழக முதலமைச்சர் தன்னுடைய மகனுக்கு பட்டம் சூட்டுவதற்காக அனைத்து வேலைகளும் செய்து வருகிறார். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக மீண்டும் போட்டியிடும் நடிகர் விஜய் பேசும்போது நான் ஒரு முறை ஓருபொழுது மறுமுறை பேசமாட்டேன் என் பேச்சு நானே கேட்க மாட்டேன் என்று தொடர்ந்து கூறி வருகிறார் கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் மரணம் அடைந்தனர் அவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல் வரவழவைத்து ஆறுதல் கூறியது மிகவும் கேலிக்கூத்தாகவே உள்ளது. ஒரு நடிகர் விஜய் சினிமா படத்தில் வசனம் எழுதிக் கொடுத்து பேசுவது போல பேசி வருகிறார் அதை சினிமாவுக்கு மட்டும்தான் சரிப்பட்டு வரும் அரசியலுக்கு சரிவராது யானை மணி சத்தம் கேட்டவுடனே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவார்கள் அது போல தான் நடிகர் விஜய் நடிகர் என்பதால் மக்கள் கூட்டம் கூடுகிறது வெளியே வர மாட்டார் தற்போது வெளியே வருவதால் மக்கள் அவரை பார்க்க வருகின்றனர் வான்கோழி மயிலாக முடியுமா? படத்தில் நடிகர் விஜய் காலை கொண்டு பத்து பேரை அடிப்பார் அதனால் தான் அவர் காலை பார்ப்பதற்கு மக்கள் வருகிறார்கள் ஆகையால் கூட்டம் கூடுபவர்கள் எல்லாம் எம்ஜிஆராகவும், ஜெயலலிதாவாகவும் யாரும் வர முடியாது மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் பதவி ஏற்பார் என்பது மட்டும் உறுதி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் கூறினார். அமைப்பு செயலாளா் சின்னத்துரை, உள்பட பலா் உடனிருந்தனா்.