தூத்துக்குடியில் எந்த ஆட்டோவிலும் மீட்டர் பொருத்தாதது ஏன்? பழைய பேருந்து நிலையத்திலிருந்து டுவிபுரம் 4ம் தெரு வரை ரூபாய் 100 வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர் தூத்துக்குடி ஆர் டி ஓ நடவடிக்கை எடுப்பாரா?
why-are-meters-not-installed-in-any-of-the-auto-rickshaws-in-thoothukudi-will-the-thoothukudi-rto-take-action-against-auto-drivers-who-charge-indian-rupee100-for-the-route-from-the-old-bus-stand-to-4th-street-tv-puram
தூத்துக்குடியில் எந்த ஆட்டோவிலும் மீட்டர் பொருத்தாதது ஏன்? பழைய பேருந்து நிலையத்திலிருந்து டுவிபுரம் 4ம் தெரு வரை ரூபாய் 100 வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர் தூத்துக்குடி ஆர் டி ஓ நடவடிக்கை எடுப்பாரா? தமிழ்நாட்டில் ஆட்டோக்களில் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்துவது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல்/டீசல் விலைக்கேற்ப கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களுக்கு, குறிப்பாக புதுச்சேரியில் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. தரச்சான்றிதழ் பெற ஆண்டுதோறும் மீட்டர் சரிபார்ப்பு அவசியம்.
தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய துறைமுகம் கடற்கரைக்கு செல்ல ரூபாய் 500 வசூல் செய்கிறார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் அதேபோல பழைய பேருந்து நிலையத்திலிருந்து கால்டுவெல் காலனி செல்வதற்கு ரூபாய் 150 கேட்கிறார்கள். குறைந்தபட்சம் 500 மீட்டர் தூரம் பயணம் செய்ய ரூபாய் 80 வசூல் செய்கிறார்கள். கேட்டால் நாங்கள் ஆர்டிஓ க்கு மாதந்தோறும் மாமுல் வழங்குகிறோம் எங்களை யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்டர் பொருத்தவே மாட்டார்கள் ஆர்டிஓ எங்கள் பக்கம் என்று பத்திரிக்கையாளர்களையே வந்து பார் என்று கூறுகிறார்கள். அனைத்து ஆட்டோக்களும் மின்னணு மீட்டர்கள் [Electronic Meters] பயன்படுத்த வேண்டும்.
கட்டணம்: 2013-ன் படி, முதல் 1.8 கி.மீ-க்கு ₹25, அடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கும் ₹12, இரவு 11 - காலை 5 மணி வரை 50% கூடுதல் கட்டணம்.
தவறினால் அபராதம்: மீட்டர் இல்லாவிட்டால் அல்லது பழுதடைந்தால், RTO அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கலாம்.
பயணிகள் மீட்டர் படியும் கட்டணத்தை வலியுறுத்தலாம், மீட்டரை பயன்படுத்தாத ஆட்டோக்களைத் தவிர்க்கலாம். தமிழகத்தில் ஆட்டோக்களில் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்துவது கட்டாயமாகும். நீதிமன்ற உத்தரவுப்படி, குறைந்தபட்சம் 2 கி.மீ-க்கு ₹25 (அரசு நிர்ணயித்த கட்டணம்) வசூலிக்க வேண்டும். மீட்டர் இல்லாத ஆட்டோக்களுக்கு தகுதிச் சான்று (Fitness Certificate) வழங்கக்கூடாது மற்றும் அதிக கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
முக்கிய தகவல்கள்:
கட்டாய மீட்டர்: சென்னை உயர் நீதிமன்றம் ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது.
கட்டண நிர்ணயம்: பெட்ரோல்/டீசல் விலை மாற்றத்திற்கு ஏற்ப கட்டணத்தை மாற்றியமைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
பயன்பாடு: 2013-ம் ஆண்டுக்கு பிறகு கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக மாற்றப்படவில்லை என ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர், இருப்பினும் மீட்டர் பொருத்துவது சட்டப்படி கட்டாயமாகும்.
நடவடிக்கை: மீட்டருக்கு மேல் கட்டணம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மீட்டர் இல்லாவிட்டால் போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதிக்கவும் வழிவகை உள்ளது. ஆட்டோ கட்டணம் குறைந்தபட்சம் 1.8 கி.மீட்டருக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கி.மீட்டர் ஒன்றுக்கு ரூ.18 என்றும், இந்த புதிய கட்டண உயர்வு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு அரசு சார்பில் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அதை திருத்தி அமைக்க வழக்கு தொடரப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பினரே கட்டணத்தை மாற்றியமைக்கும் முடிவுக்கு வந்துள்ளனர். அதற்கான அறிவிப்பையும் அவர்களே வெளியிட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுவதற்கு ஏற்படும் செலவு, விலைவாசி உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, காப்பீட்டுக் கட்டணம், ஆர்டிஓ கட்டணம் உயர்வு ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு செலவுகளும் அதிகரிக்கும்போது, ஆட்டோ கட்டணம் மட்டும் 12 ஆண்டுகளாக ஒரேமாதிரியாக இருப்பதில் நியாயமில்லைதான். கட்டண உயர்வு அவசியமானதே. இந்த கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக உள்ளனர். ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் இந்தக் கட்டணத்தை உறுதியுடன் கடைபிடிப்பார்களா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி.
கடந்தமுறை அரசு சார்பில் கட்டணம் நிர்ணயித்தபோது, அந்த கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் பின்பற்றவில்லை. மீட்டருக்குமேல் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்ததால் மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. கட்டண முறை தோல்வியடைந்தது. அரசின் உத்தரவை பின்பற்றுவதில்லை என்ற காரணத்தாலேயே கட்டணத்தை மறுசீரமைப்பதில் அரசு ஆர்வம் காட்டவில்லை.
இதற்கிடையே, ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற செயலிகள் வழியாக ஆட்டோ பயணம் எளிதானபோது அதில் நிலையான கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. ஆனால், அந்த செயலிகள் வழியாக முன்பதிவு செய்த பயணிகளிடம் இருந்தும், செயலியில் காட்டும் கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் கேட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை தொந்தரவு செய்கின்றனர்.
சில நேரங்களில் செயலி வழியாக வரும் பயணத்தை ரத்து செய்ய சொல்லிவிட்டு அந்த தொகையை தன்னிடம் நேரடியாக தருமாறு வற்புறுத்துகின்றனர். இதுபோன்ற செயல்பாடுகளால் செயலிகள் வழியான ஆட்டோ பயணமும் தோல்வியடைந்து வருகிறது.
அதேபோன்று, இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேரமாக கருதப்பட்டு, அதற்கு 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இரவு 10 மணியில் இருந்தே இரவுக் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். காலை 6 மணி வரை இரவுக் கட்டணம் என்று நிர்பந்திக்கின்றனர்.
இதுபோன்ற செயல்பாடுகள் காரணமாகவே கட்டண விவகாரத்தில் அரசு தலையிட மறுத்து வந்தது. எது எப்படியாயினும் ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பே முன்வந்து செயல்பட வேண்டும்.
tamilanda