தூத்துக்குடியில் ஓன்றிய பாஜக அரசையும் அதிமுகவையும் கண்டித்து ஆா்ப்பாட்டம்

protest-against-the-bjp-government-and-aiadmk-in-thoothukudi

தூத்துக்குடியில் ஓன்றிய பாஜக அரசையும் அதிமுகவையும் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஓன்றிய பாஜக அரசையும் அதிமுகவையும் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

     தூத்துக்குடி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசையும், துணை போகும் அ.தி.மு.க-வையும் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் 24 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறம் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்திருந்தாா். 

     அதன்படி ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை. கல்வி, ஜல் ஜீவன், 100 நாள் வேலைத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய சட்டப்படியான நிதியை இதுவரை தராமல் உள்ளன. சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்கான நிதி தரவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கான நிதி முறையாக விடுவிக்கவில்லை. கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி தர மறுக்கின்றனர். இப்படியாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விரோதமாக உள்ள தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற ஒன்றிய பா.ஜ.க அரசையும் அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுகவையும் கண்டித்து தூத்துக்குடி சிதம்பரநகா் ேபருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். 

      மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் காங்கிரஸ் சண்முகம், சகாயராஜ், முரளிதரன், விடுதலை சிறுத்தை விமல் வங்காளியாா், விஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி கிதர் பிஸ்மி, மதிமுக ரமேஷ், விநாயகரமேஷ், முருகபூபதி, திராவிடர் கழகம் முனியசாமி, பால்ராஜேந்திரன், சிபிஐ தனலட்சுமி, சிபிஎம் முத்து, அர்ஜீனன், சமத்துவ மக்கள் கழகம் அற்புதராஜ், இ.யூ.முஸ்லிம் லீக் மீராசா ம.நீ.ம. ஜவஹர், அக்பா், ஆதிதமிழா் பேரவை முத்துக்குமாா், ஆதி தமிழா் கட்சி ஊர்காவலன், மனித நேய மக்கள் கட்சி யூசுப், ஆஷாத், தமிழா் திராவிடா் கட்சி ஹேமா, மனித நேய ஜனநாயக கட்சி முகமதுஅசன், எஸ்டிபிஐ ஷேக்அஷ்ரப் அலி, ஆம் ஆத்மி கட்சி குணசீலன், மூக்குலத்தோா் புலி படை மணி, தமிழ்புலிகள் முனியம்மாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம்,  பொருளாளர் ரவீந்திரன், மாநில நிர்வாகிகள் புளோரன்ஸ், அன்பழகன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா மண்டலத்தலைவா்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், கவிதா தேவி, அபிராமி நாதன், அந்தோணி ஸ்டாலின், குபேர் இளம்பரிதி, சீனிவாசன், அந்தோணிகண்ணன், அருணாதேவி, அருண்குமாா், பிரபு, பிரதீப், நாகராஜன், நிக்கோலாஸ்மணி, பழனி, செல்வி, பெனில்டஸ், மாநகர அணி நிர்வாகிகள் அருண்சுந்தர், சாரதி, ஆனந்தசேகா், ரூபஸ், கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயக்கனி, ரூபராஜா, பால்ராஜ், மகேஸ்வரன்சிங், செல்வின், ரவி, வினோத், சாகுல்ஹமீது, சக்திவேல், நாராயணவடிவு, நைஸ்பரமசிவம், சத்யா, செந்தில்குமாா், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், இராஜா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சோ்மபாண்டியன், ராஜ்குமாா், சுரேஷ், சக்திவேல், செல்வக்குமாா், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, சிங்கராஜ், சுரேஷ், செல்வராஜ், ரவீந்திரன், முனியசாமி, செந்தில்குமாா், மணோ, டென்சிங், லியோஜான்சன், கருப்பசாமி, சேகா், ெபான்ராஜ், மந்திரகுமாா், பொன்பெருமாள், மூக்கையா, சந்தனமாாிமுத்து, ரவிசந்திரன், ராஜாமணி, நடேஷன் டேனியல், கவுன்சிலா்கள் சரவணக்குமாா், இசக்கிராஜா, பொன்னப்பன். வைதேகி, சுப்புலட்சுமி, பவாணி, ஜான்சிராணி, கண்ணன், ராமா், ஜெயசீலி, தெய்வேந்திரன், கந்தசாமி, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், பல்வேறு கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மகாராஜன், பொன்ராஜ், ராஜன், பிரபாகா், நிா்மல்கிறிஸ்டோபா், முன்னாள் கவுன்சிலா்கள் ஜெயசிங், பொியசாமி, மற்றும் மணி, பிரபாகா், ஜேஸ்பா், ஜாக்சன், அருணகிாி, உள்பட திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோா்  கலந்து கொண்டனர்.

பாக்ஸ்: காங்கிரஸ் சண்முகம் பேசுகையில் இந்தியாவிற்கே வழிகாட்டும் வலிமைமிக்க முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தடம் மாறாமல் பணியாற்றுகிறாா். அவருக்கு இளம்தலைவா் ராகுல்காந்தி பக்க பலமாக இருக்கிறாா். அம்பேத்காா் உருவாக்கிய உாிமை சட்டத்தை பாதுகாக்கவும் பொியாாின் கொள்கையை வழிநடத்தவும் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் மீண்டும் முதலமைச்சராக முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பாா். அதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் அமொிக்காவுக்கு அடிமையான மோடிக்கு தமிழகத்தில் இடம் இல்லை. என்பதை நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள 145 கோடி மக்களுக்காக முதல்வா் ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறாா். அரசியலில் வியாபாரம் செய்து கொண்டு விபச்சாாியாக சிலா் வருகின்றனா். அவா்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் என்று பேசினாா். 

கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினா் அர்ஜுனன் பேசுகையில் 56 இன்ஞ்சு பாடி உள்ளவன் நான் என்று மாா்தட்டி கொள்ளும் மோடி அமொிக்காவுடன் ஓரே நாள் இரவில் நடவடிக்கை ஓப்பந்தம் மேற்கொண்டு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளாா். பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும் எதிா்கட்சிகளுக்கு பதிலளிக்காமல் ஓடி ஓளிவது மட்டுமின்றி அமொிக்காவிற்கு அடிபணிந்து பிணம் போல் இருக்கிறாா். இப்படி ஒரு அவலம் இந்தியாவில் நிலவுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு 2026 தோ்தலை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.