தென்காசியில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தல் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பங்கேற்பு

former-minister-c.t.-chellappandian-participated-in-a-public-meeting-held-in-tenkasi-on-the-occasion-of-jayalalithaa's-birthday.

தென்காசியில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தல் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பங்கேற்பு

    தூத்துக்குடி அதிமுக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆசியோடு பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தென்காசி வடக்கு மாவட்ட சார்பில் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேவர்குளம் விரபுத்திரன் கோவில் முன்பு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.

    மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினரும் மகளிர் அணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜ லெட்சுமி, தலைமை பேச்சாளர் இசை முரசு ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினாா்கள். 

விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், வட்ட செயலாளர் அருண்குமாா், இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் நயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.