அத்திமரப்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

minister-geethajeevan-inaugurated-the-government-direct-paddy-procurement-center-in-athimarapatti

அத்திமரப்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

அத்திமரப்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

     தூத்துக்குடி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் அத்திமரப்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் திறந்து வைத்தாா். 

     நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிவகுமார், கோரம்பள்ளம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாஸ்டின் வினு, மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், 

முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, விவசாயிகள் சங்க தலைவர் பூபதி நாடார், உப்பாற்று ஓடை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அத்திமரப்பட்டி விவசாயி ஜோதிமணி, விவசாயிகள் சங்க துணை தலைவர் திருமால், ஆட்சி மண்டல உறுப்பினர்கள் தானியேல், முருகேசன், ஆலோசனை குழு உறுப்பினர்கள் தவசிவேல், அழகுராஜ், சிவனைந்த பெருமாள், ஏக்கராகாடு விவசாயிகள் சங்க தலைவர் முத்துதங்கம், கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜதுரை, பெருமாள் கோவில் அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மேலும் அமைச்சர் கீதாஜீவன் நிகழ்ச்சி பகுதிக்கு வந்ததும், தனது செருப்புகளை ஓரமாக கழற்றிவிட்டு, நெல் கொட்டப்படும் இடத்திற்குள் வந்தார். மேலும், உடன் வந்த அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் "நெல் கொட்டப்படும் இடத்தில் நடக்கும் போது செருப்பு போட வேண்டாம்" என்றும் கேட்டுக்கொண்டார். இதனை கண்டு வியந்த விவசாயிகள் அமைச்சரின் செயலை வெகுவாக பாராட்டினர்.