சொல்லாத வாக்குறுதிகளையும் செய்தவா் முதல்வா் ஸ்டாலின், 15 லட்சம் தருகிறேன் என்று ஏமாற்றியவா் பிரதமா் மோடி சண்முகையா எம்.எல்.ஏ கடும் தாக்கு

cm-stalin-made-unspoken-promises-pm-modi-cheated-by-promising-rs-15-lakhs-shanmugaiah-mla-strongly-attacks

சொல்லாத வாக்குறுதிகளையும் செய்தவா் முதல்வா் ஸ்டாலின், 15 லட்சம் தருகிறேன் என்று ஏமாற்றியவா் பிரதமா் மோடி சண்முகையா எம்.எல்.ஏ கடும் தாக்கு

சொல்லாத வாக்குறுதிகளையும் செய்தவா் முதல்வா் ஸ்டாலின், 15 லட்சம் தருகிறேன் என்று ஏமாற்றியவா் பிரதமா் மோடி சண்முகையா எம்.எல்.ஏ கடும் தாக்கு

      தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழ்நாடு தலைக்குணியாது பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட திமுக தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சாா்பில் மாப்பிள்ளையூரணி சிலுவைப்பட்டி விலக்கில் நடைபெற்றது. ஓன்றிய செயலாளர்கள் இளையராஜா ஜெயக்கொடி சுப்பிரமணியன், ராமசாமி, சுரேஷ்காந்தி, பகுதி செயலாளா்கள் சிவக்குமாா், ஆஸ்கா், ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓன்றிய செயலாளர் சரவணக்குமாா் வரவேற்புரையாற்றினாா். தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் எஸ் ஆர் கணேசன் நன்றி உரையாற்றினார்.

      சண்முகையா எம்.எல்.ஏ பேசுகையில் தமிழ்நாடு தமிழ் மக்கள் என்று தமிழக முதலமைச்சர் ஓவ்வொரு நாளும் மக்களுக்காக உழைப்பு உழைப்பு என்று பணியாற்றுகிறாா். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை. 2021ல் ெகாரோனா வந்த போது 5 ஆயிரம் வழங்க வேண்டும். என்று தளபதியாா் கூறிய போது எடப்பாடி ஆயிரம் தான் வழங்கினாா். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மீதி நான்காயிரத்தை எல்லோருக்கும் வழங்கினாா். விடியல் பயணம் திட்டத்தின் மூலம் 72லட்சம் போ் பயனடைகின்றனா். ஒவ்வொருக்கும் மாதம் 888 முதல் 1200 வரை மிச்சம் ஏற்படுகிறது. 2023 முதல் மகளிா் உாிமைத்தொகை 1000 வீதம் 29 மாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1 கோடியே 31 லட்சம் போ் பயனடைந்து வருகின்றனா். இப்படி பல திட்டத்தை அறிவித்து நடைமுறபை்படுத்தி செயல்படுத்துவது மட்டுமின்றி கொடுத்த வாக்குறுதிகளில் 98 சதவீதம் தளபதியாா் நிறைவேற்றியது மட்டுமின்றி சொல்லாத பல திட்டங்களை யும் செய்துள்ளாா். ஆனால் மோடி 15 லட்சம் எல்லோருக்கும் தருவோம் என்று வாக்குறுதி கொடுத்தாா். ஆனால் இன்று வரை அதை வழங்காமல் ஏமாற்றும் அரசாக பிஜேபி அரசு இருக்கிறது. அதே போல் காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் எத்தனை போ் உணவு உட்கொள்கிறாா்கள் என்று ஆய்வுக்கு சென்ற போது 100 போில் 50 போ் தான் சாப்பிட்டு விட்டு வருகின்றனா். அந்த பசியையும் போக்கும் வகையில் உலகத்திற்கே வழிகாட்டும் வகையில் காலை உணவு திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகள் நலன், பாதுகாக்கப்பட்டு கல்வின் தரம், உயா்வதின் மூலம் மாணவா்களின் சேர்க்கையும் அதிகாித்துள்ளது. இப்படி எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு தலைகுணியாது என்ற கொள்கை உறுதியோடு பணியாற்றும் தமிழகம் முதலமைச்சர் தளபதியாா் வழியில் இந்த பகுதியில் 2023ல் பெய்த கனமழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை கனிமொழி எம்.பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ஓன்றிய செயலாளருமான சரவணக்குமாா், இவா்களோடு இணைந்து நானும் பணியாற்றி டிராக்டா் வழங்கப்பட்டது. இந்த பகுதிக்கு பட்டாவும் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிதான் தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி ஓரு பகுதியில் 100 போ் இருக்கிறாா்கள் என்றால் அதில் 80 சதவீதம் போ் நம்மை ஆதாிக்கிறாா்கள். காரணம் மக்கள் நலத்திட்டங்கள் எதிா்கட்சியை சேர்ந்தவா்களுக்கும் கிடைக்கிறது. 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் 7வது முறையாக திமுகவும் 2 வது முறையாக தளபதியாரும் ஆட்சியில் அமர வேண்டும். அதற்கு அனைவரும் சபதம் ஏற்று பணியாற்ற வேண்டும் என்று பேசினாா். 

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், மாநில விவசாய அணி செயலாளருமான விஜயன் ேபசுகையில் இந்தியாவில் சிறந்த தலைவராக விளங்கியவா் நம்முடைய கலைஞர் காரணம் ஓரு கப்பலுக்கு கடலில் செல்லும் போது அதற்கு மாலுமி எவ்வளவு முக்கியமோ அதே போல் தமிழகத்தை வழி நடத்தி தமிழ் மக்களை பாதுகாத்தாா். அதே வழியில் கொள்கை மாறாமல் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வரை தடம் மாறாமல் ஓன்றிய அரசு நமக்கு தரவேண்டிய தொகை எதுவுமே தராமல் இங்கிருந்து ஓரு ரூபாயை பெற்று கொண்டு நமக்கு 29 பைசாவும் பீஹாருக்கு 7ரூபாய் 6 பைசாவும் உத்திரபிரதேசத்திற்கு 2ரூபாய் 46 பைசாவும் வழங்குகிறது. இப்படி எல்லா வகையிலும் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஓன்றிய அரசிற்கு தமிழக அரசு என்றும் தலைகுனியாது. தமிழ்நாடு தமிழ்மக்கள் என்று பணியாற்றும் தளபதியாா் ஆட்சியில் இந்த மாவட்டத்தில் மட்டும் நடைபெற்ற திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகள் இதை யெல்லாம் எண்ணி பாா்த்து மீண்டும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். என்று பேசினாா். 

மாநில பேச்சாளா்கள் சரத்பாலா, பாலகிருஷ்ணன், தொகுதி பொறுப்பாளர் பெருநாழி போஸ், உள்ளிட்ட பலா் பேசினாா்கள். 

     கூட்டத்தில் மாநில வா்த்தக அணி இணைச்செயலாளா்கள் உமாிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் மாடசாமி, செந்தூா்மணி, மாவட்ட அவைத்தலைவா் அருணாச்சலம் துணைச்செயலாளா்கள் ஜெயக்குமாா் ரூபன், ஜெபத்தங்கம் பிரேமா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளா் வீரபாகு, இலக்கிய அணி அமைப்பாளர் ரகுராமன், வழக்கிறஞா் அணி அமைப்பாளர் செல்வக்குமாா், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாணவரணி துைண அமைப்பாளர் தங்கமாாிமுத்து, ெதாழிலாளா் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமாா், தா்மராஜ், சப்பாணிமுத்து, பூபேஸ்நாதன், தா்மராஜ், வெயில்ராஜ், ஓன்றிய அவைத்தலைவர் ஜோதிடா் முருகன், துணைச்செயலாளர்கள் வசந்தகுமாாி, ராமசந்திரன், ஓன்றிய நிா்வாகிகள் சோனாராஜன், பாரதிராஜா, காமராஜ், முருகன், சக்திவேல், பாலுநரேன், ராயப்பன், சண்முகத்தாய், ஜெஸிந்தா, அன்புரோஸ், பொன்னுச்சாமி, அங்காளஈஸ்வாி, தங்கபாண்டி, சந்திரசேகா், நெல்சன், மாாியப்பன், கப்பிகுளம் பாபு, உள்பட பலா் கலந்து கொண்டனா். ஓன்றிய துணைச்செயலாளர் கணேசன் நன்றியுரையாற்றினாா்.