ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 80 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 80 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 15.08.2026 அன்று நமது நாட்டின் 80வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் கி. பழநி அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தார். வரலாற்றுத்துறைத்தலைவர் முனைவர் லோ. சங்கீதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் , இணைப்பேராசிரியர் முனைவர் ச. மல்லிகா அவர்கள் கொடியேற்றிச் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினரது உரை மாணவியர்களின் நாட்டுப்பற்றைத் தூண்டும் வகையில் இருந்தது. ஒவ்வொரு துறைசார்ந்த பேராசிரியர்களும் சுதந்திர தின வாழ்த்துச்செய்தியை வழங்கினார்கள். சுதந்திர தின விழாவை முன்னிட்டு வரலாற்றுத்துறை சார்ந்த மாணவியரும், தேசிய மாணவர் படையைச் சார்ந்த மாணவியரும் மற்றும் விளையாட்டுத்துறை மாணவியரும் இணைந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். சுதந்திர தின விழாப்போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர். வே. கற்பகம் அவர்கள் நன்றியுரை நல்கினார் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.
tamilanda