வடக்கு காரசேரி கிராமத்தில் ஸ்ரீ சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு பெரிய மாட்டுவண்டி போட்டி சின்ன மாட்டு வண்டி போட்டி நடந்தது.
வடக்கு காரசேரி கிராமத்தில் ஸ்ரீ சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு பெரிய மாட்டுவண்டி போட்டி சின்ன மாட்டு வண்டி போட்டி நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காரசேரி கிராமம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சுடலை மாட சுவாமி திருக்கோவில் கொடை விழா ஆடி மாதம் ஒன்றாம் தேதி கால் நாட்டு விழா, வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடந்தது. தமிழகத்தில் வங்கக் கடலோரத்தில் வழங்குழிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் வந்தவர்களை வாழவைக்கும் வடக்கு காரசேரி சீமையில் அருள்மிகு ஸ்ரீ சுடலை மாட சுவாமி திருக்கோவில் கொடை விழாவில் சிவனனைந்த பெருமாள் பேச்சியம்மன் சுடலை மாடசாமி ஈஸ்வரி அம்மன் இரட்டை சுடலை பலபேசக்காரி அம்மன் பலவேசக்காரன் மாடத்தி அம்மன் மாடன் போன்ற பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் எல்லாம் நடைபெற்றது. ஆடி மாதம் ஆறாம் தேதி இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. ஆடி மாதம் ஏழாம் தேதி குடி அழைப்பு நடைபெற்றது. இதில் தீர்த்தம் அழைத்து வருதல், கும்பம் ஏற்றுதல் போன்றவை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு கரகாட்டம், நையாண்டி மேளம் நடைபெற்றது. ஆடி மாதம் எட்டாம் தேதி கொடை விழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சிவனைந்த பெருமாள் பூஜை காலை 9 மணிக்கு வில்லிசை நடைபெற்றது. காலை 11 மணிக்கு மதியக்கொடை சிறப்பாக நடைபெற்றது. மதியம் ஒரு மணிக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பொங்கல் இடுதல் சிறப்பு அலங்கார பூஜை இரவு 11 மணிக்கு சாமக்கொடை பூஜை தீபாராதனை வான வேடிக்கை போன்றவை எல்லாம் நடைபெற்றது. ஆடி மாதம் ஒன்பதாம் தேதி இரவு 9 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடி மாதம் பத்தாம் தேதி காலையில் மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது இதில் பெரிய மாட்டு வண்டி போட்டியில் 20 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் சின்ன மாட்டு வண்டி போட்டியில் 30க்கும் மேற்பட்ட வண்டிகளும் பங்கேற்று சிறப்பித்தது இதில் பெரிய மாட்டு வண்டி போட்டியை அயிரவன்பட்டி தொழிலதிபர் எம் சி முருகேச பாண்டியன் மற்றும் வடக்கு காரசேரி ஐ ஆர் எஸ் அதிகாரி சேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர் சின்ன மாட்டு வண்டி போட்டியை வடக்கு காரச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் கணேசன் மற்றும் அயிரவன்பட்டி தொழிலதிபர் எம் சி முருகேச பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில். பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசு வேளாங்குளம் எம் கண்ணன் இரண்டாம் பரிசு ஓடக்காரன் என்ற வசந்தி தேவி எம் சி முருகேச பாண்டியன் வடக்கு காரச்சேரி மூன்றாம் பரிசு எம்.எம். ராஜா பிரதர்ஸ் சங்கரப்பேரி மற்றும் எஸ் எம் பள்ளி வர்த்தக ரெட்டி பட்டி நான்காம் பரிசு ஓட்டக்காரன் என்ற வசந்தி தேவி எம் சி முருகேச பாண்டியன் கரையடி கருப்பன் துறை சுப்பம்மாள் மறுகால் குறிச்சி வேல்முருகன் மயிலாப்பூர் சென்னை, சின்ன மாடு வண்டி போட்டியில் முதல் பரிசு ஓம் ஆவரைகுளம் இரண்டாம் பரிசு கருப்பசாமி பாண்டியன் மகிழினி நாகம்பட்டி மற்றும் முத்து பிரதர் சங்கமம் பட்டி, மூன்றாம் பரிசு ஆர்த்தி வேடவெட்டி போத்தி சாமி நடுவக்குறிச்சி நான்காம் பரிசு குட்டி பாண்டியன் செய்துங்கநல்லூர் ஐந்தாம் பரிசு இசக்கித்தாய் வடக்கு காரசேரி மற்றும் இரண்டாவது சுற்று சின்ன மாட்டு வண்டி போட்டியில் மணி தேவர் ஆனை குட்டி தேவர் காங்கேயன் குளம் இரண்டாம் பரிசு சுப்பையா கோனார் செட்டிமுள்ளம்பட்டி மூன்றாம் பரிசு வானமாமலை பெரியார் நாச்சியார் குளம் பவி அமரா கயத்தார் நான்காம் பரிசு ஓட்டக்காரன் என்ற வசந்தி தேவி வடக்கு காரசேரி டாக்டர் முத்துப்பாண்டியன் நாளந்துல்லா வண்ணார் மாடல் துரை, சூரம்பள்ளம் கன்னியாகுமரி மாவட்டம், விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் விழா கமிட்டியாளர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள், வடக்கு காரசேரி தலைவர், ஊர் நாட்டான்மை, விழா கமிட்டியாளர்கள், நிர்வாகிகள், செய்திருந்தனர்.
tamilanda