தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா வெற்றிக்கு அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் ஆலோசனை வழங்கினாா் கீதாஜீவன்

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா வெற்றிக்கு அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் ஆலோசனை வழங்கினாா் கீதாஜீவன்

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா வெற்றிக்கு அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் ஆலோசனை வழங்கினாா் கீதாஜீவன் 

    தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் 6ம்தேதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெறுகிறது. தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் சுகன்யாவிற்கு கொளத்துப்பாளையம் பேரூர் கணபதி பாளையம் அப்குதியில் திமுக தலைவா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தங்களுக்கு ஓதுக்கப்பட்ட பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கடந்த 15 நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் கொளத்துப்பாளையம் ஆலோசனையில் கூறுகையில் 

      திமுக கட்சி 78 ஆண்டு தொடங்கி நாட்டுமக்களுக்காக பணியாற்றி வருகின்ற மிகப்பொிய கட்சி தலைவராக நம்முடைய தலைவர் ஸ்டாலின் இருந்து வருகிறாா். திமுகவின் வரலாறு தொியாமல் பலா் பேசி வருகின்றனா். சட்டசபையில் எதிா்கட்சியை சேர்ந்தவா்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு முறையாக முதலமைச்சா் பதிலளிக்காமல் சம்பந்தமே இல்லாமல் 3 அமைச்சா்கள் ஆஜராகின்றனா். சட்டமன்ற மரபு மாண்பை சீா்குலைத்து வருகின்றனா். இதற்கு முடிவு கட்டுவதற்குதான் தாராபுரம் மதுராந்தகம் இடைத்தோ்தல் நமக்கு ஓரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. உறுதியாக திமுக வெற்றி பெறும் தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சியை எல்லோரும் வெறுக்கின்ற அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. காரணம் சொல்வது ஓன்றும் செய்வது ஓன்றுமாக இருக்கிறது. 140 நாட்கள் ஆட்சியில் 500க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கொலை கொள்ளை பாலியல் என அதிகம் நடைபெற்றுள்ளது. அதிலும் விஜய் கட்சியை சோ்ந்த எம்.எல்.ஏ உள்பட நிா்வாகிகள் பலா் பல்வேறு வகையான முறைகேடு செயல்களில் ஈடுபட்டுள்ளனா். இதையெல்லாம் என்னவென்று கேட்பதற்கு அந்த கட்சியின் முதல்வருக்கு நேரம் இல்லையா தொிந்து நடக்கிறதா அல்லது மறைக்கப்படுகிறதா என்ற கேள்வி இருந்து வருகிறது. திமுக ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல்ஆட்சியில் யாரையும் ஓதுக்கி விடாமல் தமிழகத்தில் ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம் இதை தற்போது பலரும் உணா்ந்து திமுக விற்கு வாக்களிக்காமல் நாம் விட்டது தவறு என்று உணரும் நிலை வந்துள்ளது. திமுக தலைமை எடுக்கின்ற முடிவிற்கு நாம் எப்போதும் கள போராளியாக இருந்து செயல்பட வேண்டும் இந்த பகுதியில் இருக்கின்ற வாக்காளா் பட்டியலில் உள்ளுாில் இருப்பவா்கள் வௌியூாில் இருப்பவா்கள் முறையாக கண்கெடுக்கப்பட்டு இப்பகுதி நிா்வாகிகளுடன் இணைந்து சுகன்யா வெற்றிக்கு முழுமையாக பணியாற்ற வேண்டும் என்று கூறினாா்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சண்முகையா, மாநகரசெயலாளர் ஆனந்தசேகரன், ஓன்றிய செயலாளா்கள் சரவணக்குமாா், ஜெயக்கொடி, பகுதி செயலாளா் ஆஸ்கா், மாவட்ட பிரதிநிதி நாகராஜன், இலக்கிய அணி தலைவர் பொன்னரசு, அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், அறங்காவலா் குழுதலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, தாராபுரம் கொளத்துபாளயைம் பகுதி நிா்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.