மாநகராட்சியில் எல்.ஆர் நகல் வழங்கியதில் பல கோடி மோசடி விசாரணை நடத்த வேண்டும் வழக்கறிஞர் ராஜசேகர் பேட்டி.
மாநகராட்சியில் எல்.ஆர் நகல் வழங்கியதில் பல கோடி மோசடி விசாரணை நடத்த வேண்டும் வழக்கறிஞர் ராஜசேகர் பேட்டி.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கனகராஜ் மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் பத்திரப்பதிவு செய்ய வேண்டுமென்றால் மாநகராட்சி சார்பில் இருந்து எல்.ஆர் நகல் வழங்க வேண்டும் அதன் அடிப்படையில் தான் பத்திரப்பதிவு செய்ய முடியும் ஆனால் மாநகராட்சியில் இருந்து தற்போது வழங்கவில்லை என்று திமுக கவுன்சிலர் கனகராஜ் பேசினார் அப்போது மேயர் ஜெகன் பேசுகையில் மாநகராட்சியில் இருந்து வழங்கவில்லை என்றால் இதுவரை செய்த பத்திரப்பதிவு எல்லாம் போலியானது என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை என்றால் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் எல்லாத்தையும் ரத்து செய்ய வேண்டுமா என்று பரபரப்பாக பேசினார் இந்த நிலையில் வழக்கறிஞர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தூத்துக்குடி மாநகர் பகுதியில் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றால் மாநகராட்சியில் இருந்து எல்.ஆர் வழங்க வேண்டும் அதன் அடிப்படையில் தான் பத்திரப்பதிவு செய்ய முடியும் இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை ஏடி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு சுற்றறிக்கை ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பி உள்ளார் அதில் நில அளவைப் பிரிவு டிஜிட்டல் ஆக்கப்படுவதால் மாநகராட்சியில் இருந்து வழங்கப்படும் எல் ஆர் நகல் வழங்க வேண்டாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எல்.ஆர் நகல் பெற வேண்டும் என்றால் மாநகராட்சிக்கு 600 ரூபாய் செலுத்த வேண்டும். நிறுத்தப்பட்டதால் எல்.ஆர். நகல் பெறுவதற்கு புரோக்கர்கள் மூலம் பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மாநகராட்சியில் இருந்து முந்தைய தேதி போட்டு எல்.ஆர் நகல் வழங்கப்பட்டுள்ளது ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பத்திரங்கள் தூத்துக்குடி மாநகரில் ஆறு மாதத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதன்படி பார்த்தால் மாநகராட்சிக்கு 6 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்விக்கு ஆணையர் சரியான பதில் அளிக்கவில்னல. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தற்போது அதிகாரிகள் அரசுக்கு ஆதரவாக உள்ளனர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எதிராக அதிகாரிகள் செயல்படுகின்றன தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திமுகவை சேர்ந்தவர்கள் தான் மேயராக உள்ளனர் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை இணைந்து செயல்பட்டால் மட்டுமே செயல்படுத்த முடியும் நேற்றைய கூட்டத்தை பார்க்கும் பொழுது மாநகராட்சி ஆணையர் அரசுக்கு ஆதரவாகவே உள்ளார் என்று தெரிய வருகிறது ஆகையால் டிஜிட்டல் ஆகும் வரை மாநகராட்சிக்கு பொதுமக்கள் 600 ரூபாய் செலுத்தி எல்.ஆர் நகல் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் அதுபோல ஆறு மாத காலத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து எவ்வளவு எல்.ஆர் நகல் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதனால் மாநகராட்சி எவ்வளவு இழப்பீடு என்ற விசாரணை நடத்த வேண்டும் என்று வக்கீல் ராஜசேகர் கூறியுள்ளார்.
tamilanda