குப்பைகளைத் தரம் பிரித்து அப்புறப்படுத்துவதில் சுமார் ₹9.56 கோடி முறைகேடு : தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார் சஸ்பெண்ட்

misappropriation-of-approximately-indian-rupee956-crore-in-waste-segregation-and-disposal-thoothukudi-corporation-deputy-commissioner-saravanakumar-suspended

குப்பைகளைத் தரம் பிரித்து அப்புறப்படுத்துவதில் சுமார் ₹9.56 கோடி முறைகேடு : தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார் சஸ்பெண்ட்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு வருட காலமாக துணை ஆணையராக பணியாற்றி வருபவர் சரவணகுமார். இதற்கு முன்பு சரவணகுமார் நாகர்கோவில். தஞ்சாவூர் அதன் பிறகு ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் அதிகாரியாக பணியாற்றி வந்தார் அதற்கு முன் தஞ்சாவூரில் ஆணையராக சரவணகுமார் பணியாற்றிய போது

தஞ்சாவூர் மாநகராட்சி ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில், 28 ஏக்கர் பரப்பளவில் குவிந்து கிடந்த குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தும் ஒப்பந்தத்தில் பல கோடி முறைகேடு செய்துள்ளார்.

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் பயோ-மைனிங் (bio-mining) முறையில் குப்பைகளைத் தரம் பிரித்து அப்புறப்படுத்துவதில் சுமார் ₹9.56 கோடி முறைகேடு மற்றும் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக

புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி வரும் சரவணக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் அதற்கான உத்தரவை இன்று துணை ஆணையர் சரவணக்குமாரிடம் வழங்கப்பட்டது