2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு.
police-are-keeping-a-close-watch-on-all-check-posts-in-thoothukudi-district-ahead-of-the-2026-assembly-elections
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு.

தூத்துக்குடி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல்துறையினர் அனைத்து சோதனை சாவடிகளிலும் 24 மணிநேரமும் சுழற்றி முறையில் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசவப்பபுரம் சோதனை சாவடிக்கும், சாத்தான்குளம் உட்கோகோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியதாழை சோதனை சாவடிக்கும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிரேஷ் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செய்துங்கநல்லூர் சோதனை சாவடிக்கும் நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் காவல்துறையினரின் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணி ஆகியவற்றை ஆய்வு செய்து, குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் எனவும், காவல்துறையினர் ஒளிரும் ஜாக்கெட்டுகள் அணிந்து வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் எனவும், சோதனை சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் மேலும் மாவட்டத்தில் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வாகனங்களின் விபரங்களை பதிவேட்டில் பராமரிக்குமாறும் அறிவுரைகள் வழங்கினர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
tamilanda