தூத்துக்குடி மாநகராட்சி சாதாரன கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் ஆணையர் ப்ரியங்கா துணை மேயா் ஜெனிட்டாஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரன கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் ஆணையர் ப்ரியங்கா துணை மேயா் ஜெனிட்டாஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

என்னை யாரும் மிரட்டி பார்க்க முடியாது நீங்கள் தவறு செய்தால் கண்டிப்பாக நான் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன் என்னுடைய முடிவு அதிரடியாக இருக்கும் யாருக்கும் பயப்படுகிறவன் நான் அல்ல திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த பதவி அந்தப் பணியை நான் சிறப்பாக மக்களுக்காக செய்வதற்காக தான் இந்த பதவியில் இருக்கிறேன் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பொியசாமி பேசினார்.

     தூத்துக்குடி மாநகராட்சி சாதாரன கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் ஆணையர் ப்ரியங்கா துணை மேயா் ஜெனிட்டாஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. 

     கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் 55 மாதத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேவையான அனைத்து வசதிகளும் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு உதவியுடன் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தினசரி குடிநீர். 53க்கும் மேற்பட்ட பூங்காக்கள். படிப்பகங்கள். உள்ளிட்டவைகள் மாநகர மக்களுக்கு செய்து உள்ளேன் என்று கூறினாா். அதனை தொடா்ந்து மாநகராட்சியில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

     திமுக கவுன்சிலா் கனகராஜ் பேசுகையில் மாநகராட்சியில் இருந்து பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பு எல்.ஆர் நகல் வழங்கப்பட்டு வந்தது அதன் அடிப்படையில் தான் பத்திர பதிவு செய்யப்பட்டது தற்போது டவுன் பிளான் துறையில் இருந்து எல்.ஆர் நகல் வழங்கப்படவில்லை இதனால் பத்திரப்பதிவு செய்வதற்கு மக்கள்சிரமப்படுகின்றனா். அதிகாரிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு பழைய எல்.ஆர் நகலை வைத்து பத்திரப்பதிவு செய்யப்படுகிறது முன்பு 600 ரூபாய் பணம் செலுத்தப்பட்டு நகல் பெறப்பட்டது தற்போது இதனை நிறுத்தி வைத்துள்ளனர் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர் கனகராஜ் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆணையர் ப்ரியங்கா தற்போது ஆன்லைனில் பதிவு செய்யப்படுவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார் ஆனால் தொடர்ந்து திமுக கவுன்சிலர் கனகராஜ் அதிகாரிகள் தவறு செய்கிறார்கள் என்று பேசினாா். 

இதனையடுத்து மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் கடந்த சில மாதங்களாக எல்.ஆர் நகல் பழையதை வைத்து பத்திர பதிவு செய்யப்படுகிறது அப்படி என்றால் அந்த பத்திரம் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் அது போலி பத்திரமா என்று கேள்வி எழுப்ப வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது மாநகராட்சிக்கு வருவாய் வருவதை யாரும் தடுக்கக் கூடாது என்று பேசினாா். 

திமுக கவுன்சிலா் சுரேஷ்குமார் பேசுகையில் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் மாஸ் கிளீனிங் பணிக்கு ஏற்கனவே உள்ள பணியாளர்கள் பயன்படுத்தப்படுகிறதா இல்லை புதியதாக வேறு ஆட்கள் மூலம் பயன்படுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார் அதற்கு ஆணையர் ப்ரியங்கா இல்லை புதியதாக ஆட்கள் தான் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது என்று ஆணையர் கூறினார் அதற்கு அனைத்து கவுன்சிலர்களும் எழுந்து இல்லை ஏற்கனவே பணியில் இருந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றனர் என்று ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினார்கள் அதற்கு அதிகாரிகள் சரியான பதில் இல்லை அப்போது திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார் நாங்கள் நினைத்தால் வரும் அதிகாரிகளை அந்தந்த பகுதியில் உட்கார வைத்து விடுவோம் அது எங்களால் முடியும் என்று ஆக்ரோஷமாக கூறினார் அப்போது மேயர் ஜெகன் பொியசாமி பதிலளிக்கையில் கடந்த நான்கு வருட காலமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் மாஸ் கிளீனிங் பணிக்கு புதிய ஆட்கள் நியமிக்கப்பட்டு தான் பணிகள் நடைபெறும் ஆனால் தற்போது அது நடைபெறவில்லை என்று தெரிகிறது குறிப்பாக கிழக்கு மண்டலத்தில் இதுபோல பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது ஆகையால் பணியாளர்கள் அதிகாரிகள் சரியான முறையில் பணிகளை செய்ய வேண்டும் இல்லை என்றால் கவுன்சிலர்களுக்கு அதிகாரம் வழங்குகிறேன் உங்கள் பிரச்சனை சரி செய்யவில்லை என்றால் நீங்கள் உடனடியாக போராடலாம் அதற்கு நான் எந்த விதத்திலும் தடையாக இருக்க மாட்டேன் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஈடுபடுங்கள் கிழக்கு மண்டலத்தில் 14 பெண் கவுன்சிலரும் ஒரு ஆண் கவுன்சிலரும் உள்ளனர் 15 பேரும் சேர்ந்து பணிகள் சரியாக செய்யாவிட்டால் போராடுங்கள் என்றார் மேயர் ஜெகன் பொியசாமி.

     திமுக கவுன்சிலர் கனகராஜ் பேசுகையில் கவுன்சிலர்களிடம் எந்த விதமான ஆலோசனை செய்யாமல் குடிநீர் இணைப்புக்கு பொருத்தப்பட்டுள்ள மோட்டார் அகற்றப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் அறிக்கை கொடுத்தது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் எல்லாம் கவுன்சிலர்களிடம் தான் கேள்வி கேட்கிறார்கள் நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று கூறினார் அதற்கு அதிகாரிகள் பதில் இல்லை உடனடியாக மேயர் ஜெகன் பொியசாமி தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் ஆனால் தூத்துக்குடி மாநகரில் மட்டும் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது எந்த விதமான குடிநீர் தட்டுப்பாடு இல்லை அடுக்குமாடி குடியிருப்பு அனுமதி கொடுக்கப்பட்டு குடிநீர் இணைப்பு ேமாட்டார் அப்புறப்படுத்த வேண்டும் என்றால் அது சரியாக இல்லை தவறான முன்னுதாரணமாக உள்ளது 55 மாதத்தில் மாநகரில் குடிநீர் பிரச்சினை முழுவதும் தீர்க்கப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். 

     கவுன்சிலர் முத்துவேல் பேசுகையில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தமிழக வெற்றி கழக ஆட்சி வந்த பிறகு மாநகராட்சியில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை எந்த ஒரு அதிகாரியும் பணிகள் மேற்கொள்ளவில்லை அமைச்சர் மழை வெள்ளநீர் வரும் பகுதியை விட்டுவிட்டு வேற பகுதியில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து செல்கிறார் அதுபோல மாநகர் பகுதி முழுவதும் சுவர் விளம்பரங்கள் தனியார் விளம்பரங்கள் எழுதப்படுகிறது இதன் மூலம் மாநகராட்சிக்கு எவ்வளவு வருவாய் வந்தது என்று ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார் அதற்கு ஆணையர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தனியார் பங்களிப்புடன் சுவர்களில் விளம்பரம் எழுதப்படுகிறது மாநகராட்சிக்கு எந்த விதமான வருவாயும் இல்லை நெடுஞ்சாலைத்துறை சுவற்றில் விளம்பரம் எழுதப்பட்டிருந்தது அதற்கு அந்த அதிகாரி என்னிடம் விவரங்களை கேட்டார் நான் அதற்கு உடனடியாக அந்த விளம்பரத்தை அளிக்குமாறு கூறினேன் அதற்கு சுவர் விளம்பரம் எழுதியவர் அளிக்க முடியாது என்று பதிலளித்தார் அதன் பிறகு சுவர் விளம்பரம் அளிக்கப்பட்டது இந்த சுவர் விளம்பரம் எல்லாம் முன்பு மாநகராட்சி சார்பில் நானே முன்நின்று பல சுவர்களில் விளம்பரம் எழுதப்பட்டது அதில் ஆணையர் மேயர் என்று இருக்கும் ஆனால் தற்போது அந்தந்த நிறுவனங்களின் பெயர்கள் உள்ளது இது தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என்று மேயர் ஜெகன் கூறினார்.

     தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஒட்டுமொத்த திமுக கவுன்சிலர்களும் அதிகாரிகளை கடுமையாக குற்றம் சாட்டினார்கள் தமிழக வெற்றி கழக ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் கவுன்சிலர்கள் கூறினார்கள் மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு எந்த ஒரு அதிகாரியும் பதிலளிக்காமல் மௌனம் காத்தது தான் வேடிக்கையாகவே இருந்தது மேயர் ஜெகன் பொியாமி இறுதியாக பேசுகையில் அதிகாரிகள் சரியாக பணிகளை செய்ய வேண்டும் நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டு தான் இருக்கிறேன் வந்துள்ளேன் என்னை யாரும் மிரட்டி பார்க்க முடியாது நீங்கள் தவறு செய்தால் கண்டிப்பாக நான் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது பிறகு என்னுடைய முடிவு அதிரடியாக இருக்கும் யாருக்கும் பயப்படுகிறவன் நான் அல்ல திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் கொடுத்த பதவி அந்தப் பணியை நான் சிறப்பாக மக்களுக்காக செய்வதற்காக தான் இந்த பதவியில் இருக்கிறேன் என்று மேயர் ஜெகன் பொியசாமி அதிரடியாக பேசினார்.

கூட்டத்தில் மண்டலத்தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலா்கள் சுரேஷ்குமாா், சந்திரபோஸ், சரவணக்குமாா், பொன்னப்பன், கண்ணன், ரெங்கசாமி, அதிஷ்டமணி, சோமசுந்தாி, வைதேகி, தனலட்சுமி, ராமுஅம்மாள், மும்தாஜ், பேபி ஏஞ்சலின், இசக்கிராஜா, தெய்வேந்திரன், கந்தசாமி, ரெக்ஸ்லின், உள்பட கவுன்சிலா்கள் அதிகாாிகள் கலந்து கொண்டனா்.