எஸ்ஐஆா் குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டு பா.ஜ., பதிலடி வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அரசியலாக்க வேண்டாம் தூத்துக்குடியில்– விவேகம் ரமேஷ் பேட்டி
எஸ்ஐஆா் குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டு பா.ஜ., பதிலடி வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அரசியலாக்க வேண்டாம் தூத்துக்குடியில்– விவேகம் ரமேஷ் பேட்டி
தூத்துக்குடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்ஐஆர் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் கூறியதாவது தேர்தல் என்பது ஜனநாயகத்தின் மிக முக்கியமான நடைமுறை. அதில் வாக்காளர் பட்டியலின் துல்லியமும், நம்பகத்தன்மையும் மிகவும் அவசியம். தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் இருப்பதையும், இரட்டை பதிவு, இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் தகுதியற்ற பதிவுகள் போன்றவற்றை சரிசெய்வதையும் உறுதி செய்வதற்காகவே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எஸ்ஐஆர்் என்பது எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எதிரான நடவடிக்கை அல்ல. தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வமான பணியை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அதன் நோக்கம் மற்றும் நடைமுறையை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எஸ்ஐஆர் முறைகேடு இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறினால், அதற்கான குறிப்பிட்ட ஆதாரங்களை பொதுமக்கள் முன் வைப்பதுடன், உரிய தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளிக்க வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவது தேர்தல் நடைமுறையின் மீதான நம்பிக்கையை பாதிக்கக்கூடும். வாக்காளர் பட்டியல் தூய்மையாகவும், துல்லியமாகவும் இருப்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான ஒன்று. எனவே, எஸ்ஐஆர் பணியை அரசியலாக்காமல், தகுதியான ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
தெற்கு மாவட்ட பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மண்டல தலைவர் சண்முகசுந்தரம் உள்பட பலா் உடனிருந்தனர்.
tamilanda