புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி NSS சார்பில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

*தூத்துக்குடி: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில், தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மரக்கன்றுகள், விதைகள் நடுதல் மற்றும் இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, 29.09.2026 அன்று அந்தோணியார்புரம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.*

*நிகழ்ச்சிக்கு அந்தோணியார்புரம் பங்குத்தந்தை அருட்பணி A. ஸ்டீபன் மரியதாஸ் தலைமை வகித்தார். ஊர் நிர்வாகத் தலைவர் J. இருதய செல்வன் முன்னிலை வகித்தார்கள்*

*Lion. M. மருதப்பெருமாள், M.Com., Office Superintendent, கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சமூக ஆர்வலர், ALL CAN TRUST, தூத்துக்குடி அவர்கள் மரக்கன்றுகளை நட்டு, மரங்களின் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார்.*

*பள்ளியின் முதன்மை கணினி ஆசிரியர் P. பிரகாஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். NSS ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.*