திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றார்.

திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றார்.

திருநெல்வேலி சரக காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

இன்று (30.09.2026) புதன்கிழமை, திருநெல்வேலி சரக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றார்.

திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டன. எஞ்சிய 310 மனுக்கள் மீது துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.