தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச்சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச்சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச்சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.

     தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச்சங்கத்தின் 22வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருமூலர் பூங்கா அருகில் நடைபெற்றது. நலச்சங்க தலைவர் தங்கராஜா தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினாா். 

   முன்னாள் தலைவர் ஆறுமுகம், மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, கவுன்சிலர் சுப்புலட்சுமி, காமராஜ் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கந்தசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினார்கள். பள்ளி கல்லூரி இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஹேமலதா வரவேற்றார். சண்முகராஜ், பாலசுப்ரமணியன் பிச்சையா கர்டோசா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினாா்கள். தமிழ்ச்செல்வன் 2025-2026ம் ஆண்டிற்கான ஆய்வு அறிக்கை வாசித்தார். 2025- 2026ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சண்முகசுந்தரம் வாசித்தார். தலைவர் தங்கராஜா பொதுக்குழு தீர்மானத்தை வாசித்து ஒப்புதல் பெற்றார். 

   நிகழ்ச்சியில் நலச்சங்க நிர்வாகிகள் டேவிட்சன் சிவசுப்பிரமணியன், சொக்கலிங்கம், வீரப்பெருமாள், நாகராஜ் கென்னடி, சுப்புராஜ், நாராயண மூர்த்தி, மாரியப்பன், காசிலிங்கம் மற்றும் வத்சலாதேவி, ஹேமலதா, காசிக்கனி ஆகியோர் கலந்துகொண்டனர். வத்சலாதேவி நன்றி கூறினார்.