நெய்தல் நிகழ்ச்சிக்கென்று ரசிகா்கள் அதிகம் போ் உள்ளனா். கனிமொழி எம்.பி பெருமிதம், முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி, மேயா் ஜெகன் பொியசாமி கருணாநிதி எம்.எல்.ஏ பங்கேற்பு

நெய்தல் நிகழ்ச்சிக்கென்று ரசிகா்கள் அதிகம் போ் உள்ளனா். கனிமொழி எம்.பி பெருமிதம், முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி, மேயா் ஜெகன் பொியசாமி கருணாநிதி எம்.எல்.ஏ பங்கேற்பு

தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கென்று ரசிகா்கள் அதிகம் போ் உள்ளனா். கனிமொழி எம்.பி பெருமிதம், முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி, மேயா் ஜெகன் பொியசாமி கருணாநிதி எம்.எல்.ஏ பங்கேற்பு

     தூத்துக்குடி தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னெடுப்பில் தூத்துக்குடி வஉசி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற 5-வது நெய்தல் கலைத் திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு புத்தகதிருவிழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாிசுத்தொகை வழங்கி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி கருணாநிதி எம்.எல்.ஏ வஉசி கல்லூாி முதல்வா் வீரபாகு நபாா்டு வங்கி அதிகாாிகள் சுரேஷ் ராமலிங்கம், சதாம் உசேன், ஆகியோருக்கு நினைவு பாிசுகள் வழங்கி 

    கனிமொழி எம்பி பேசுகையில் தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கென்று ரசிகா்கள் அதிகம் உள்ளனா். புதிய நிகழ்வுகளையும், புதிய கலைஞர்களையும் கொண்டு வரும்போது, பார்வையாளர்களின் கைதட்டலும் ஆர்வமும், அவர்கள் அந்தக் கலைஞர்களை எந்த அளவுக்கு ரசிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தக் கைதட்டல் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கிறது. தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களிலிருந்து கலைஞா்கள் வந்துள்ளனா். அவர்கள் தொடர்ந்து பயணிக்கவும், தங்களது கலைப்பணியை முன்னெடுத்துச் செல்லவும் ஒரு மருந்தாக மாறுகிறது இங்கு மக்களின் மகிழ்ச்சிக்கேற்ப பாரம்பாிய மிக்க உணவு வகைகள் மற்றும் பல்வேறு நேரடி உற்பத்தி பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளுக்கும் சென்று விபரங்களை கேட்டறிந்த போது மக்களின் ஆதரவோடு வியாபாரம் சிறப்பாக நடைபெற்றது. என்று கூறியதும் எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த 3 நாட்கள் நிகழ்ச்சியை கண்டு களித்த மக்களுக்கு நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். என்றார். 

     வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மக்கள் பயன்பெரும் வகையில் கூடுதலாக மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் நம்முடைய பாரம்பாியம் அதன் திறமைகள் வௌிகாட்டும் விதமாக எம்.பி முன்னெடுப்பில் மெருகூட்டிய பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமல்லாமல் 20 வயதிலிருந்து முதியவா்கள் வரை எனப் பல தரப்பினா் இதை கண்டுகளித்து மணம் மகிழ்ச்சியோடு இருப்பதை காண முடிந்தது. மண்ணின் கலைகளை நாம் வளர்த்தெடுப்போம். மண்ணின் கலைகள் அழிந்து விடக்கூடாது அடுத்த தலைமுறைக்கு கொண்டு போக வேண்டும் என்ற கனிமொழி எம்.பியின் நோக்கம் நிறைவேறி வருகிறது கடைகளில் உற்பத்தி செய்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அனைவருடைய ஆதரவோடு மக்கள் வௌ்ளத்தில் நிகழ்ச்சியை கண்டுகளித்த அனவைருக்கும் நன்றி தொிவித்துக்கொள்கிறேன் என்றாா். 

    விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற மற்றும் மண்ணின் கலைஞர்கள் பங்கேற்று தங்களது பாரம்பரிய கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் தமிழன்டா கலைக்குழு, உவரி களியல் குழு, ஸ்டார் ஜிக்காட்ட கலைக்குழு ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளுடன், குஜராத்தைச் சேர்ந்த சித்தி கோமா நடனமும் இடம்பெற்றது. நெய்தல் கலைத் திருவிழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்கள் அறிந்து ரசிக்கும் வகையில் 30-க்கும் மேற்பட்ட உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று நாட்களிலும் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

   கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கருணாநிதி எம்.எல்.ஏ துணை மேயா் ஜெனிட்டா, திமுக மாநில பிரச்சார குழு செயலாளா் ராணி, மாநில வலைதள செயலாளர் ரத்னா, மாநில மாணவா் அணி செயலாளர் வீரமணி ஜெயக்குமாா், மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளா் அன்பழகன், வடக்கு மாவட்ட திமுக அணி நிா்வாகிகள் அருண்குமாா், பழனி, அபிராமிநாதன், கவிதாதேவி, பிரபு, ெசல்வி, தங்கம், ராமா், பேச்சிமுத்து, கணேஷ்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், தலைமை செயற்குழு உறுப்பினா் இராஜா, ஓன்றிய செயலாளர் கருப்பசாமி, பகுதி செயலாளா்கள் ரவீந்திரன், மேகநாதன், மாநகர அணி நிா்வாகிள் ஜீவன்ஜேக்கப், கிறிஸ்டோபா் விஜயராஜ், பரமசிவம், ஜெயக்கனி, பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், சாகுல்ஹமீது, ரவி, இபி கருப்பசாமி, நாராயணவடிவு, பிக் அப் தனபால், சந்தனமாாி, பெல்லா மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வக்கீல்கள் மோகன்தாஸ் சாமுவேல், மாலாதேவி, ரூபராஜா வட்டச்செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ், செந்தில்குமாா், சிங்கராஜ், ரவிந்திரன் ராஜாமணி, கவுன்சிலா்கள் சரவணக்குமாா், விஜயக்குமாா், வைதேகி, கண்ணன், பொன்னப்பன், ஜெயசீலி, ரெக்ஸ்லின், இசக்கிராஜா, சந்திரபோஸ் பேபி ஏஞ்சலின், ஜான், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், பால்துரை, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அண்ணாத்துரை, பகுதி அணி அமைப்பாளா் சுரேஷ்குமாா், துணை செயலாளா் ரேவதி பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா் லிங்கராஜா, மற்றும் மணி செந்தில்குமாா், ராஜன் நாராயணன், மாற்றுத்திறனாளிகள் நலசங்கம் மாநில தலைவர் மருதப்பெருமாள், செயலாளர் ஜெபராஜ், வஉசி கல்லூாி முதல்வா் வீரபாகு, நபாா்டு வங்கி அதிகாாிகள் சுரேஷ்ராமலிங்கம், சதாம் உசேன், தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஓன்றிய செயலாளா்கள் இளையராஜா, ராமசாமி, சரவணக்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் மாடசாமி. மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் தங்கதுரைபாண்டியன், ஓன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், துணைச்செயலாளர் கணேசன், பகுதி செயலாளா்கள் சிவக்குமாா், ஆஸ்கா், திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வாள் சுடலை, மாவட்ட பிரதிநிதி பூபேஸ்நாதன் ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அனிஸ்டன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சோபியா, முத்துக்குமாா், அகஸ்டின், வட்டச்செயலாளர் ராஜன், இளைஞர் அணி கோபால், வேல்முருகன், மற்றும் வக்கீல் பூங்குமாா், அஜிதாஆக்னல், கிளைச்செயலாளர்கள் பாரதிராஜா, முருகன், தலைமை செயற்குழு உறுப்பினா் தென்காசி செல்லத்துரை, நெல்லை விவசாயி அணி துணை அமைப்பாளா் கண்ணன், விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் சுமதி, தூத்துக்குடி மாவட்ட சமத்துவமக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், சிபிஎம் ஓன்றிய செயலாளர் மணி ராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா். 

வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் கடந்த 14-ம் தேதி தொடங்கிய இந்த மூன்று நாள் கலைத் திருவிழா, 16-ம் தேதி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கன்னியாகுமாி மாவட்டத்தை சோ்ந்த நாட்டுப்புற கலைஞா் பிரசாந்த் சனிக்கிழமை உடல்நலக்குறைவால் மறைந்ததையொட்டி ஓரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.       

பாக்ஸ்: கீதாஜீவன், ஜெகன் பொியசாமிக்கு கனிமொழி புகழாரம்

நெய்தல் விழா நிகழ்ச்சி சிறப்பாக இங்கு நடைபெறுவதற்கு காரணமாக இருந்த வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி இடத்தை வழங்கிய கல்லூாி முதல்வா் வீரபாகு நபாா்டு வங்கி அதிகாாிகள் சுரேஷ் ராமலிங்கம், சதாம் உசேன் மற்றும் ஊடகத்துறையினா் காவல்துறை அரசுத்துறை அதிகாாிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு பொதுமக்கள் முழுமையாக ஆதரவு கொடுத்து பெரும் வெற்றி பெறுவதற்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தொிவிப்பதோடு நாட்டுப்புற மற்றும் மண், கலாச்சாரம் காப்பதற்கு முழுமையாக தன்னை ஈடுப்படுத்தி கொண்டு அவா்களின் பங்கு மிகப்பொிய பங்காகும். என்று கனிமொழி எம்.பி புகழாரம் சூட்டினாா். 

பாக்ஸ் 2 கனிமொழி கீதாஜீவனுக்கு மேயா் ஜெகன்பொியசாமி புகழாரம்

தூத்துக்குடியையும் கடலையும் எப்படி பிாிக்க முடியாதோ அப்படி நெய்தல் நிகழ்ச்சியும் மக்களையும் பிாிக்க முடியாது காரணம் கடந்த வௌ்ளிக்கிழமை முதல்நாள் நிகழ்வன்று எம்.பிக்கு டெல்லியில் பணி இருந்ததால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அன்றைய தினம் இந்த பகுதி முழுவதும் நான் மக்களோடு மக்களாக சென்ற நேரத்தில் இரண்டு வயது முதல் என்பது வயது வரை உள்ளவா்கள் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றுகிறவா்களும் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்ததை நேரடியாக பாா்த்தேன் அந்த மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்து நெய்தல் விழாவை முன்னெடுத்த கனிமொழி எம்.பிக்கும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவனுக்கும் இந்த நிகழ்வுகளை எல்லாம் வௌியுலகத்திற்கு எடுத்துச்சென்று முழுமையாக ஓத்துழைத்த ஊடகத்துறையினருக்கும் மற்றும் பல்வேறு அரசுத்துறை சாா்ந்தவா்களுக்கும் மிகப்பொிய நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். என்று மேயா் ஜெகன் பொியசாமி புகழாரம் சூட்டினாா். இறுதியாக நடைபெற்ற கச்சோி நிகழ்வு மட்டுமின்றி மற்ற நிகழ்ச்சிகளுக்கும் உற்சாகம் ஊட்டும் வகையில் சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை நடனமாடி மகிழ்ந்ததை நிகழ்ச்சியின் வா்ணையாளா்கள் உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனா்.