விளாத்திகுளம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட 6பேர் மட்டுமே நேர்காணலில் பங்கேற்பு :
only-6-candidates-participate-in-interview-to-contest-on-behalf-of-dmk-in-vilathikulam-constituency
விளாத்திகுளம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட 6பேர் மட்டுமே நேர்காணலில் பங்கேற்பு :
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட 7 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.
தமிழகத்தின் 17வது சட்டமன்ற தோ்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் மாா்ச் 30ம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளா்கள் தோ்வில்தீவரம் காட்டி வருகின்றனா். திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவா்களிடம் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பொதுச்செயலாளர் அமைச்சா் துரைமுருகன் பொருளாளா் பாலு, முதன்மை செயலாளர் அமைச்சா் நேரு தலைமை செயலாளா் ஆா் எஸ் பாரதி ஆகியோா் நோ்காணல் நடத்தினாா்கள்.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளரும் பாளையங்கோட்டை தொகுதி தோ்தல் பாா்வையாளருமான வசந்தம் ஜெயக்குமாா், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சென்றாய பெருமாள், புதூர் ஓன்றிய துணைச்செயலாளர் ரவி, அக்ரி பாலமுருகன், உள்பட 6 போ் நோ்காணலில் கலந்து கொண்டனா்.
tamilanda