ராமையன்பட்டி அரசு புது காலனியில் தரமான சாலை அமைக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
ராமையன்பட்டி அரசு புது காலனியில் தரமான சாலை அமைக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
நெல்லை ஆக.19- ராமையன்பட்டி ஊராட்சி 4வது வார்டு அரசு புது காலனி பகுதியில் தரமான சாலை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நெல்லை அருகே ராமையன்பட்டி ஊராட்சி 4வது வார்டு கவுன்சிலர் மாரியப்ப பாண்டியன், பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ராமையன்பட்டி பஞ்சாயத்தில் நான்காவது வார்டில் உள்ள அரசு பொது காலனி, சிவாஜி நகர் பஸ் ஸ்டாப்புக்கு கீழ்ப்புறம் சிமெண்ட் ரோடு தரம் இல்லாமல் அமைக்கப்பட்டு வருகிறது குளத்துக்குள் பள்ளமான ஏரியாவில் சரள் மண் எதுவும் அடிக்காமல் சாலையின் கனத்தை உயர்த்தாமல் பணிகள் நடக்கிறது . ஒன்றரை இன்ச் ஜல்லி சிமெண்ட் போடாமல் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது
இதனால் அச்சாலையானது ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்காது. இது குறித்து ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை இந்நிலையில் கலெக்டர் நேரில் ஆய்வு நடத்தி தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கும் நிகழ்ச்சியில் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தச்சை மண்டல தலைவர் தங்கவேலு இந்து மக்கள் கட்சி முத்துப்பாண்டி நாட்டாமை மாரியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
tamilanda