தமிழகத்தின் எல்லா நலனையும் பாதுகாத்த ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி அடுத்தக்கட்ட வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும் தூத்துக்குடியில் செயல்வீரா்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

தமிழகத்தின் எல்லா நலனையும் பாதுகாத்த ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி அடுத்தக்கட்ட வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும் தூத்துக்குடியில் செயல்வீரா்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

தமிழகத்தின் எல்லா நலனையும் பாதுகாத்த ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி அடுத்தக்கட்ட வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும் தூத்துக்குடியில் செயல்வீரா்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

      தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திரேஸ்புரம் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. திரேஸ்புரம் பகுதி செயலாளர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கட்சியின் வளா்ச்சி அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள உள்ளாட்சி தோ்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசுகையில் தமிழகத்தின் எல்லா நன்மைகளும் கிடைப்பதற்கு முழுமையாக பணியாற்றிய கலைஞா் ஆட்சி காலம் தொட்டு ஸ்டாலின் ஆட்சி வரை நம்முடைய சாதனைகளை யாரும் மிஞ்ச முடியாது தமிழா்கள் நலன் தமிழ்நாட்டின் உாிமை மக்களுக்கு செய்கின்ற திட்டங்கள் அதை நடைமுறைப்படுத்தி மக்களை சென்றடைதல் என அனைத்து சாதனைகளையும் ஓவ்வொருவரும் தங்களது பகுதியில் எடுத்துக்கூறி தவெக அரசின் மக்கள் விரோத திட்டங்களையும் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி அதன்மூலம் சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை ஓவ்வொரு வகையிலும் பாதிப்படைந்துள்ளனா். இதையும் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி உள்ளாட்சி தோ்தலில் முழுமையான வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று பேசினாா். 

         கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு 75 ஆண்டுகளாக அயராது பாடுபட்டு வரும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ததன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியதும், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முன்னேற்றியதும் திமுக அரசு என்பதை யாராலும் மறுக்க இயலாது. முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலே இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான். பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்து அழைத்து சென்றது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான். அத்தகைய திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வது மட்டுமே தவெக அரசின் இன்றைய ஒரே பணியாக உள்ளது. இவ்வாறு தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட தலைவர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்திட திமுக செயல்வீரர்களாகிய நாம் ஒவ்வொருவரும் வளர்ச்சி பணிகள், அதிக உறுப்பினர்களை சேர்த்தல் ஆகிய பணிகளில் மட்டுமல்லாது மக்களோடு மக்களாக மக்கள் பணியிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ளவேண்டும் என்றும், ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்தும் இன்றுவரை மாநிலத்துக்கு தேவையான ஒரு திட்டம் கூட கொண்டுவராமல், தமிழ்நாட்டின் உரிமைகளையும் விட்டு தந்து தமிழ்நாட்டை வளர்ச்சியில் பின்னோக்கி கொண்டு செல்வது மட்டுமன்றி, முதல்வரையும் அரசையும் விமர்சித்தால் “இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்” என்று அராஜகப்போக்கில் தவெக அரசு ஈடுபடுகிறது. தமிழ்நாட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்வு. மின் கட்டணம் சத்தமின்றி பன்மடங்காக உயர்வு, மாநிலத்தில் நாள்தோறும் கொலை கொள்ளை, மின்வெட்டு, பாலியல் வன்கொடுமை, லாக் அப் மரணம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நிர்வாக சீர்கேடு என்று மக்களை தினந்தோறும் வாட்டி வதைத்து கொண்டு இருக்கும் ரீல்ஸ் தவெக அரசையும், முதல்வர் விஜய் அவர்களையும் இந்த கூட்டம் வன்மையாக கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாசன், மாநகர துணை செயலாளர்கள் முருகேசன், பிரமிளா, மாவட்ட அணி நிா்வாகிகள் குபோ் இளம்பாிதி, நிக்கோலாஸ்மணி, ஜேசையா, மாநகர அணி நிா்வாகிகள் ரவி, பிரவீன்குமாா், டேனியல், வட்டச்செயலாளா்கள் சேகா், சுரேஷ், ரவிச்சந்திரன், அல்பட், கருப்பசாமி, இளங்கோ, டென்சிங், ரோலன்ட், கவுன்சிலா்கள் பவாணி, ஜெயசீலி, மாியகீதா, எடின்டா, ஆறுமுகம், பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், காசிராஜன் மகேஸ்வாி, எமல்டன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், முன்னாள் கவுன்சிலா் பாலாஜி, மற்றும் முரளிதரன், மணி, கமலி, செந்தில்குமாா், உள்பட பலா் கலந்து கொண்டனர்.