தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்காக தூத்துக்குடி தஸ்நேவிஸ் மேல்நிலைய பள்ளி மாணவிகள் கபடி போட்டியில் முதலிடம்/ உடற்கல்வி ஆசிரியை சில்வாஃபர்னாண்வுக்கு பாராட்டு
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகள், செப்டம்பர் மாதம் முழுவதும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. 2026–27 ஆண்டிற்கான போட்டிகள் செப்டம்பர் மாத தொடக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் லட்சக்கணக்கானோர் இப்போட்டிகளில் ஆர்வமுடன் பதிவு செய்து பங்கேற்று வருகின்றனர். முதற்கட்டமாக மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவர். இந்த நிலையில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 38 கபாடி அணிகள் பங்கேற்றனர். இதில் தஸ்நேவிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள். ரூபாய் 36 ஆயிரம் பணம் முடிப்பு பெற்று இருக்கிறார்கள். இவர்களுக்கு தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைபள்ளி..தாளாளர் அருட் சகோதரி. சிறுமலர்தலைமையாசிரியை. அருட்சகோதரி. சகாய ஹேமலதா ஜெயந்தி, பெற்றோர்கள் ஆகியோர் உடற்கல்வி ஆசிரியை. சில்வா பர்ணான்டோ - வுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.
tamilanda