தமிழ்நாடு முழுவதும் 5000 தட்டச்சுப் பள்ளிகள் மூடல் அபாயம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோாிக்கை

தமிழ்நாடு முழுவதும் 5000 தட்டச்சுப் பள்ளிகள் மூடல் அபாயம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோாிக்கை

தமிழ்நாடு முழுவதும் 5000 தட்டச்சுப் பள்ளிகள் மூடல் அபாயம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோாிக்கை

      தூத்துக்குடி அரசுத் தொழில்நுட்பக் கல்வித் தேர்வு ஜிடிஇ விடைத்தாள் திருத்தும் பணியை உடனடியாக நிறுத்துமாறு தட்டச்சுப் பள்ளிகளின் சங்கம், தொழில்நுட்பக் கல்வி இயக்குநருக்கு கடும் எச்சரிக்கையுடன் கடிதம் எழுதியுள்ளது. சங்கத் தலைவர் டாக்டர் கே. சுரேஷ் குமார் தலைமையில் அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், மேனுவல் டைப்ரைட்டா் மூலம் நடைபெறும் தட்டச்சுப் பள்ளி தேர்வுகளை கணினி வழி முறைக்கு மாற்றும் முயற்சியை கடுமையாக எதிர்த்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 5,000 அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பள்ளிகள் மூடப்படும் அபாயத்திலும், 55,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தொழில் வல்லுநர்கள் வேலை இழக்கும் நிலையிலும், 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயத்திலும் உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், மால்பிராக்டிஸ் கமிட்டி விசாரணை முறை, தமிழ்99 மற்றும் 28-10-2024 தேதிய அரசாணை எண்.187 கட்டாயப்படுத்தல், மறுதிருத்தம் வசதி நீக்கப்பட்டது, தேர்வுப் பணி சன்மானம் தாமதமாவது, தவறாபன தேர்வு மையம் தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளையும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கட்டாயப்படுத்தப்பட்டுள்ள தமிழ் 99-ஐ நிரந்தரமாக நீக்க வேண்டும்; மேனுவல் டைப்ரைட்டா் முறையிலேயே தேர்வுகள் தொடர வேண்டும்" என சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.