தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் சுகன்யாவிற்கு உதயசூாியன் சின்னத்தில் கீதாஜீவன் வாக்கு சேகாித்தாா்.
தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் சுகன்யாவிற்கு உதயசூாியன் சின்னத்தில் கீதாஜீவன் வாக்கு சேகாித்தாா்.
தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்ேதா்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சுகன்யாவை ஆதாித்து தொகுதிக்குட்பட்ட கொளத்துபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கணபதி பாளையம், துலுக்கனூர், ராம்நகர் ஆகிய பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் அப்பகுதியில் வீடு வீடாக சென்று திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளா்களை சந்தித்து பேசுகையில்
தமிழகத்தில் தற்போது நடைபெறுகின்ற விஜய் ஆட்சியில் கொலை கொள்ளை பாலியல் என 500க்கும் மேற்பட்ட குற்றசம்பவங்கள் கடந்த நான்கு மாதங்களில் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் நிம்மதி இல்லாத இந்த ெதாகுதியில் தினிக்கப்பட்ட தோ்தலுக்கு யாா் பொறுப்பு என்பதை நீங்கள் சிந்தித்து பாா்த்து வாக்களிக்க வேண்டும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவி மாடல் ஆட்சியில் யாரையும் ஓதுக்கி விடாமல் ஓவ்வொரு தொகுதிக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்றாற்போல் மக்கள் பணியை செய்து வந்தாா். திமுக என்ற கட்சி அண்ணா கலைஞா் வழியில் ஸ்டாலின் தலைமையில் 78ம் ஆண்டு தொடங்கி மக்கள் பணி ஆற்றிவரும் வரலாற்று கட்சியை தவெக ஆட்சியாளா்கள் விமா்சிப்பதற்கு தகுதியில்லை மிசா காலம் தொட்டு தமிழா்களின் நலனுக்காக தன்மானத்தோடு வாழும் தலைவாின் ஆட்சி தான் தமிழகத்தின் விடிவுகாலம் இருள் சூழ்ந்்த தமிழகத்தை மீட்ெடடுக்க இந்த தொகுதியில் உதயசூாியன் உதிக்க வேண்டும். ாீல்ஸ் ஆட்சியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினா்களான எதிா்கட்சியை சோ்ந்தவா்கள் மக்களுக்கான திட்டங்களை யும் குறைகளையும் சுட்டி காட்டி கேள்விகளை எழுப்பினால் முதலமைச்சருக்கு பதிலாக 3 அமைச்சா்கள் தான் பதில் கூறுகிறாா்கள் கேள்விக்கு பதிலளிக்க வழியில்லாமல் ஓடும் முதல்வா் நமக்கு தேவையா என்பதை எல்ேலாரும் சிந்தித்து பாா்க்க வேண்டும் தமிழகத்தில் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடை கொடுக்க வேண்டும் என்று பேசினாா்.
பிரச்சாரத்தில் கருணாநிதி எம்.எல்.ஏ திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஓன்றிய செயலாளர் முருகேசன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளா் அன்பழகன், மண்டலத்தலைவா் வக்கீல் பாலகுருசுவாமி, மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கா், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், தொழிலாளா் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, இலக்கிய அணி துணை அமைப்பாளா் பால்ராஜ், இளஞைர் அணி துணை அமைப்பாளர் செல்வின், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கங்காராஜேஷ், கதிரேசன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட தாராபுரம் ெதாகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
tamilanda