சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவை செலுத்த தூத்துக்குடி மாநகராட்சி கோரிக்கை - 5% ஊக்கத்தொகை அறிவிப்பு
சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவை செலுத்த தூத்துக்குடி மாநகராட்சி கோரிக்கை - 5% ஊக்கத்தொகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
2026-2027 ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியினை 31.10.2026-க்குள் முழுமையாக செலுத்தும் பொதுமக்களுக்கு, செலுத்த வேண்டிய வரித்தொகையில் 5% ஊக்கத்தொகை (அதிகபட்சமாக ₹5000) வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகியவற்றில் நிலுவைத் தொகை வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும், இந்த செய்தி வெளியிடப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் தங்களது நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தி, முறையான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட காலக்கெடுவிற்குள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, சீல் வைத்தல், ஜப்தி நடவடிக்கை முதலியன மேற்கொள்ளப்படும். மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்களில், www.tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தங்களது வரிகளை செலுத்தலாம்.எனவே, பொதுமக்கள் தங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து நிலுவைகளையும் உடனடியாக செலுத்தி, தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்
tamilanda