காமராஜா ஐபிஎஸ்,வரும் செப்டம்பர் 17 வியாழக்கிழமை, அன்று,பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார்.
காமராஜா ஐபிஎஸ்,வரும் செப்டம்பர் 17 வியாழக்கிழமை, அன்று,பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார். தேவேந்திர குல வேளாளர்கள், தமிழ்நாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு : தேவேந்திர குல வேளாளர் அரசாணை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது, அரியானா மாநிலம் சிர்சா நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் சுனிதா துக்கல் எம்பி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
தேவேந்திரர்கள் தொட்டால் தான் தேரோடும்"* என்றும்..சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களின் வம்சாவளியினர் தேவேந்திர குல வேளாளர்கள்"* என்றும்.. தமிழகத்திலுள்ள 436-க்கும் மேற்பட்ட ஆலயங்களில் மரபுவழி வழிபாட்டுரிமையைப் பெற்று வருபவர்கள் தேவேந்திரர்கள்"* என்றும்..
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பெருமிதம்மிக்க வரலாறுகளை நாடாளுமன்றத்தின் குறிப்பேடுகளில் தனது பேச்சாற்றல் மூலமாக தெளிவாக பதிவு செய்தார் *சுனிதா துக்கல் எம்பி
சுனிதா துக்கல் எம்பி நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு காரணமாக இருந்தவர் காமராஜா ஐபிஎஸ்.
காமராஜா ஐபிஎஸ்-சின் நெருங்கிய நண்பர் சுனிதா துக்கல் எம்பி,
காமராஜா ஐபிஎஸ் அரியானா மாநில காவல்துறையில் ஏடிஜிபியாக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.!
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற அரசாணைக்காக பல ஆண்டுகள் உழைத்த உத்தமர் காமராஜா ஐபிஎஸ், தேவேந்திர குல வேளாளர் அரசாணையை நிறைவேற்றி தந்த பாரதிய ஜனதா கட்சிக்கும், பிரதமர் நரேந்திரமோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வென்றெடுக்க வெளியில் இருந்து குரல் கொடுப்பதை விட, பாரதிய ஜனதா கட்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, தேசிய தலைவர்களின் பார்வைக்கு பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை கொண்டு சென்று, பாஜக தேசிய தலைவர்கள் மூலமாக பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை நிறைவேற்ற தேவேந்திர குல வேளாளர் அரசாணை நாயகர் போற்றுதலுக்குரிய பாரதப் பிரதமர் "நரேந்திரமோடி" பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் *பி.எல்.சந்தோஷ்*
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் *நயினார் நாகேந்திரன்* ஆகியோர்களின் முன்னிலையில் சென்னை கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு தேசத்திற்காகவும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் செயல்பட இருக்கிறார் *காமராஜா ஐபிஎஸ்*
காமராஜா ஐபிஎஸ் அவர்களது அரசியல் பயணம் சிறக்க உலகமெங்கும் வாழுகின்ற தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்.!
இவ்வாறு தேவேந்திர குல வேளாளர்கள், தமிழ்நாடு அமைப்பு தெரிவித்திருக்கிறது
tamilanda