வடக்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்த எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை இருவரும் நீட் தேர்வில் சாதனை : ஓட்டப்பிடாரம் திமுக முன்னாள் எம்எல்ஏ சண்முகையா எம் சி முருகேச பாண்டியன் வாழ்த்து

நீட் தேர்வில் வென்று ஒரே அரசு மருத்துவக் கல்விக்குத் தேர்வாகியுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கைக்கு ஓட்டப்பிடாரம் திமுக முன்னாள் எம்எல்ஏ சண்முகையா எம் சி முருகேச பாண்டியன் வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்த எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை இருவரும் நீட் தேர்வில் சாதனை படைத்து, ஒரே நேரத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயிலத் தேர்வாகி அப்பகுதி மக்களுக்குப் பெரும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜா – சீனிமாலா தம்பதியினர் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது மகன் சேதுபிரகாஷ் வல்லநாடு சாரா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், மகள் முகிலா பூவானி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் தங்களது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தனர். முறையான திட்டமிடலும் தீவிரக் கடின உழைப்பும் கொண்டு நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொண்ட இருவரும், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர்.

தற்போது நடந்து முடிந்த மருத்துவச் சேர்க்கை கலந்தாய்வில், அண்ணன் சேதுபிரகாஷ் மற்றும் தங்கை முகிலா ஆகிய இருவருக்குமே கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயில்வதற்கான சேர்க்கை இடம் கிடைத்துள்ளது. எளிய பின்னணியைக் கொண்ட விவசாயக் குடும்பத்திலிருந்து ஒரே நேரத்தில் இருவர் அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வாகியுள்ளது அக்கிராமத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக் கல்விக்குத் தேர்வாகியுள்ள மாணவச் செல்வங்களின் எதிர்காலக் கல்வி சிறக்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்துப் பாராட்டும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.