தூத்துக்குடி வீ த லீடர் அமைப்பு சார்பில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கின்ஸ் அகடாமி போட்டி தேர்வு மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டனர்.
தூத்துக்குடி வீ த லீடர் அமைப்பு சார்பில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கின்ஸ் அகடாமி போட்டி தேர்வு மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டனர். வீ த லீடர் அமைப்பைச் சார்ந்த நிர்வாகி அண்ணாமலை கடந்த மாதம் கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரைவிலான சுமார் 175 கிலோ மீட்டர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். ஒரு ஆண்டுகள் இந்த பணியை செய்ய வீ த லீடர் அமைப்பு சார்ந்த உறுப்பினர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கியிருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பகுதியில் வீ த லீடர் அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு அண்ணாமலை ஆலோசனை வழங்கியிருந்தார். இதை தொடர்ந்து தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை மற்றும் ரோச் பூங்கா கடற்கரையை தூத்துக்குடி கின்ஸ் அகடாமி நிறுவன தலைவர் பேச்சு முத்து தலைமையில் அகடாமி பயிற்சி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த ஆறு வாரங்களாக தன் கணக்கில் குப்பைகளை சேகரித்து வருகிறார்கள். இந்த குப்பைகளில் முதன்மையாக பீங்கான் பாட்டில்கள் சேர்த்திருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6.45 க்கு கடற்கரை பகுதிக்கு கின்ஸ் அகடாமி நிறுவனத் தலைவர் பேச்சு முத்து தலைமையில் கடற்கரைப் பகுதிக்கு வருகை புரிந்து குப்பைகளை பிரித்து எடுக்கிறார்கள். அவற்றை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைகிறார்கள். அந்த பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
tamilanda