தவெக ஆட்சியில் தூத்துக்குடியில் அறநிலைத்துறைக்கு சொந்தமான விநாயகர் கோவில் மூடல்
தவெக ஆட்சியில் தூத்துக்குடியில் அறநிலைத்துறைக்கு சொந்தமான விநாயகர் கோவில் மூடல்
தூத்துக்குடி தமிழகத்தில் இந்துசமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்து கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்கள் உள்ளது இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு ரத வீதி பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது இது இந்துசமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது குறிப்பாக விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் யாகசாலை பூஜைகள் நடைபெறும் இரவில் சப்பரத்தில் விநாயகர் வீதி உலா நடைபெறும். ஆனால் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு ரத வீதி பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவில் இன்று கோவில் நடை திறக்காமல் மூடப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது விநாயகர் சதுர்த்தி அன்றைய தினம் விநாயகர் கோவில் திறக்காமல் மூடப்பட்டு இருப்பது நல்லது அல்ல என்று ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.
இதுபற்றி வஉசி பேரவை மாநில தலைவரும் அரசு ஊழியர் ஓய்வு பெற்ற சங்கத் தலைவருமான செல்வ மாரியப்பன்

கூறுகையில் இந்த சித்தி விநாயகர் கோவில் எங்களது குடும்பம் தான் கோவிலை கட்டி அரசிடம் ஒப்படைத்தது காலம் காலமாக எங்கள் குடும்பம் பூஜைகள் நடத்தி வருகிறது தமிழக வெற்றி கழக ஆட்சியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சித்தி விநாயகர் கோவில் 100 ஆண்டு பழமையான கோவிலாகும் விநாயகர் சதுர்த்தி அன்று கோவில் நடை திறக்காமல் மூடப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு உணவு கொடுக்காமல் அவரைப் பட்டினி போட்டு இருக்கிறார்கள் தமிழக வெற்றி கழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில் அர்ச்சகர்க்கு போன் பண்ணினால் போன் எடுக்கவில்லை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிக்கு போன் பண்ணினால் போன் எடுக்க மறுக்கிறார்கள் விநாயகர்சதுர்த்தி அன்று காலையில் யாகசாலை பூஜை நடைபெறும் சிறப்பு அபிஷேகம் அதன் பிறகு சிறப்பு பூஜை நடைபெறும் இரவில் சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெறும் ஆனால் எதுவும் இன்று நடைபெறாமல் கோவில் நடை பூட்டி இருப்பது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ஆகையால் உடனடியாக தமிழக அரசு கோவில் நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வஉசி பேரவை மாநில தலைவர் மாரியப்பன் கூறினார்.
tamilanda