பாரத் மக்கள் முற்போக்கு முன்னணி கழகம் தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சா் கீதாஜீவனுக்கு முழு ஆதரவு
the-bharat-makkal-murpokku-munnani-kazhagam-extends-its-full-support-to-the-thoothukudi-dmk-candidate-minister-geetha-jeevan
பாரத் மக்கள் முற்போக்கு முன்னணி கழகம் தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சா் கீதாஜீவனுக்கு முழு ஆதரவு

தமிழகத்தில் புதிய கட்சி தொடக்க விழா தூத்துக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. தமிழகத்தில் சாதிகள் பெயரில் பல வன்கொடுமைகள், வன் செயல்கள், நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவை தடுக்கப்பட வேண்டும். கடுமையான சட்டங்களை இயற்றி தண்டனை வழங்க. வேண்டும். சாதிய வன்கொடுமைகள் அகல வேண்டும், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், கடுமையான சட்டங்கள் இயற்றி பெண்களை பாதுகாக்க எமது கட்சி குரல் கொடுக்கும். மேலும் கௌரவ கொலைகள் நடப்பதை தடுக்க வழக்கு தொடுக்கப்படும். இளைஞர்கள் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டும். காதல் திருமணங்கள் நடக்க இந்த கட்சி உறுதுணையாக இருக்கும். சமுதாயம் நிம்மதியாக இருக்கவும், சாதிய வன்முறைகளை களைந்திடவும் பாடுபடும். தமிழன் என்ற சான்று போதும், எந்த சாதி என்று அரசு கேட்கவும் வேண்டாம், அனைவரும் ஒரே சாதிதான் என்பதை நிலை நிறுத்த எமது கட்சி கொள்கையுடன் செயல்படும் வகையில் புதிய கட்சியை ஓருங்கிணைப்பாகளா பாரதி நல்லையா துவக்கியுள்ளாா்.
இந்நிலையில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வரும் ேதா்தலில் மதசாா்பற்ற முற்போக்கு திமுக கூட்டணிக்கு முழுமையான ஆதரவு தொிவித்து பிரச்சாரம் செய்வதாக தொிவித்தனா்.
நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் ராஜ், பொருளாளர் துர்காதேவி, தென்காசி மாவட்ட செயலாளர் ராஜ், திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ், நெல்லை மாவட்ட செயலாளரும் பொதுக்குழு தலைவருமான நம்பிராஜன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் விநாயகம், மாவட்ட துணை செயலாளர் கோபால் உட்பட பலா் கலந்து கொண்டனர்
tamilanda