சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி.யு .போப் பொறியியல் கல்லூரியில் கல்லூரி விழா பீக்கன் 2026 என்ற பெயரில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தாளாளர் ந. ஜெயக்குமார் சந்தோஷ் தலைமை தாங்கினார், கல்லூரி முதல்வர் டாக்டர் .ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.
The college festival, titled "Beacon 2026," was held at Dr. G.U. Pope Engineering College in Sawyerpuram. The event was presided over by the Correspondent, Mr. N. Jayakumar Santhosh, while the College Principal, Dr. J. Jafinth, graced the occasion.
டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் கல்லூரி விழா.
சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி.யு .போப் பொறியியல் கல்லூரியில் கல்லூரி விழா பீக்கன் 2026 என்ற பெயரில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தாளாளர் ந. ஜெயக்குமார் சந்தோஷ் தலைமை தாங்கினார், கல்லூரி முதல்வர் டாக்டர் .ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் திரு .எஸ். டி. கே. ராஜன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல குருத்துவ செயலாளர் அருட்திரு . டி.ஜி.ஏ .தாமஸ், ஸ்டாண்டிங் கமிட்டி கல்லூரி நிலை வர குழு செயலாளர் திரு. ஜெபச்சந்திரன் போப் கலைக்கல்லூரி செயலாளர் திரு. ஜெபர்சன் சாமுவேல் ராஜ், சாயர்புரம் பாஸ்ட்ரேட் சேர்மன் அருட்திரு. ஆனந்த் சாமுவேல், திரு.டேனியல் கருணாகரன் நார்வே, பீக்கன் ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாக்ஸன் மற்றும் திரு.ஸ்டீபன் ஜோசப், ஆட்சி மன்ற குழு நிர்வாக உறுப்பினர்கள், திருமண்டல பெருமண்டல உறுப்பினர்கள், , செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
tamilanda