ஏழை மாணவ, மாணவியருக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி வழங்கினார்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஏழை மாணவ, மாணவியருக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி வழங்கினார்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்த விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 'விஜயலட்சுமி - கதிர்வேல் சேரிட்டபிள் டிரஸ்ட்' நிதி உதவியுடன் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கி, தேர்வு செய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட பயனாளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள், வட்டாரத் தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
tamilanda