தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு, சர்வதேச கடலோர தூய்மை தினம் - கடற்கரை தூய்மைப் பணி
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு, சர்வதேச கடலோர தூய்மை தினம் - கடற்கரை தூய்மைப் பணி
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு இன்று (19.09.2026) இனிகோ நகர் மற்றும் தெற்கு கடற்கரை சாலை பகுதிகளில் மாபெரும் கடற்கரை தூய்மைப் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்வினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலை வகித்தார்.
இந்த சிறப்பு தூய்மைப் பணியை தூத்துக்குடி மாநகராட்சி உடன் இணைந்து வீ கேன் டிரஸ்ட் அமைப்பினர் செய்திருந்தனர். மேற்படி தூய்மை பணியில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி, புனித மரியன்னை கல்லூரி, காமராஜ் கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, மதர் தெரசா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 16 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றினர். மேலும் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் இப்பணியில் கலந்து கொண்டனர்.
மேலும் ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி, ஜயண்ட்ஸ் நல சங்கம், TCBA, TSAA, ICAR, CMFRI, கிரிஷ்யா லாஜிஸ்டிக்ஸ், WCWR, YWCA, தூத்துக்குடி CFS அசோசியேஷன் ஆகிய நிறுவனங்கள் உதவிகள் செய்து பங்கு பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கானஏற்பாடுகளை மாநகர் நல அலுவலர் டாக்டர் எஸ் ஆர் கணேஷ் அவர்களின் தலைமையில் சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன் மற்றும் அரிகணேசன் ஆகியோருக்கு மேற்கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
tamilanda