தூத்துக்குடியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குவைத் ஐடிசி மற்றும் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பில் ஏழை எளிய இஸ்லாமியர்கள் 250 பேருக்கு சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் சமையல் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது
in-thoothukudi-on-the-occasion-of-the-ramadan-festival-kuwait-itc-and-masjid-rahman-jointly-distributed-rice-and-cooking-essentials-to-250-underprivileged-muslims
தூத்துக்குடியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குவைத் ஐடிசி மற்றும் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பில் ஏழை எளிய இஸ்லாமியர்கள் 250 பேருக்கு சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் சமையல் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது

இஸ்லாமியர்கள் தங்களது ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு பெருநாளான ரம்ஜான் பண்டிகை கொண்டாட நோன்பு இருந்து வருகின்றனர் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ஏழை எளியோருக்கு பித்ரா வழங்குவது முக்கிய கடமையாகும்
இந்நிலையில் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் குவைத் ஐடிசி சார்பில் ஏழை எளிய இஸ்லாமியர்களும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக அவர்களுக்கு பிரியாணி செய்வதற்கான அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் அன்றைய தினம் இறைச்சி வாங்குவதற்காக பணமும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை எளிய இஸ்லாமியர்கள் 250 பேருக்கு சுமார் ரூபாய் ஒரு லட்சத்தி 50,000 மதிப்பிலான அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளிவாசல் தலைவர் அகமது இக்பால் மற்றும் நிர்வாகிகள் சுலைமான், முகமது, நவாஸ், அண்ணல், பள்ளி இமாம் அஸ்கர், இஸ்மாயில், அபுபக்கர் அல்தாபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழங்கினர்.
tamilanda