20 ஆண்டுகளுக்கு மேலாக தார் சாலை இல்லை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கடலையூர் எஸ் ஏ கனி மழை நீரில் சோப்பு போட்டு குளித்து போராட்டம் நடத்தியதால் பேவர் பிளாக் சாலை : பொதுமக்கள் மகிழ்ச்சி
20 ஆண்டுகளுக்கு மேலாக தார் சாலை இல்லை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கடலையூர் எஸ் ஏ கனி மழை நீரில் சோப்பு போட்டு குளித்து போராட்டம் நடத்தியதால் பேவர் பிளாக் சாலை : பொதுமக்கள் மகிழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி யூனியன் உட்பட்ட திட்டங் குளம் பஞ்சாயத்து உள்ள முத்துநகர் பகுதியில் தார் சாலை பழுதடைந்து 20 ஆண்டுக்கு மேலாக உள்ளது இது சம்பந்தமாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக முதலில் மனு மூலம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அப்புறம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இளைஞரணி தலைவர் கடலையூர் எஸ் ஏ கனி மழை நீரில் சோப்பு போட்டு குளித்து போராட்டம் செய்தார்கள் அதற்கு அப்புறம் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தற்போது அந்த சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் ரோடு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் முத்துநகர் பகுதியில்JJM திட்டத்தில் குடிநீர் குழாய் போடப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி உள்ளது அதிலும் தண்ணீர் வருவது கிடையாது. இது சம்பந்தமாகவும் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாரி அவரிடம் முறையிடும் உடனடியாக குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்தார்கள். தற்போது அனைத்து வீடுகளிலும் தண்ணீர் வருகின்றது இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்
tamilanda