திருநெல்வேலி மண்டல கல்லூரிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வெளியே சமூக ஆர்வலர் குமரேசன் பேட்டி அளித்தார்.

திருநெல்வேலி மண்டல கல்லூரிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வெளியே சமூக ஆர்வலர் குமரேசன் பேட்டி அளித்தார்.

தெற்கு கள்ளிகுளம், அரசு உதவி பெறும் தெஷண மாற நாடார் சங்கம் கல்லூரியில் தற்போது பொறுப்பு முதல்வராக முறைகேடாக பொறுப்பேற்று, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் முனைவர்.த. நிர்மலா அவர்களை பதவி நீக்கம் செய்யவும், ஆள்மாறாட்டம் செய்து சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் அலுவலக கண்காணிப்பாளர் தங்க விக்னேஷ் அவர்களை பதவி நீக்கம் செய்து கிரிமினல் வழக்கு தொடுக்கவும் மற்றும் தனிநபர் வழக்கறிஞர், கல்லூரியின் போலி பொது தகவல் அலுவலராக செயல்பட்டு வரும் த. முத்துகிருஷ்ணன் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்யவும், மேலும் கல்லூரியில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல்களைத் தடுத்து நிறுத்தவும் கேட்டுக்கொள்வதோடு இவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து கல்லூரியை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.