களக்காட்டில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் பெண்களுக்கான ‘குழந்தை வளர்ப்பு வழிகாட்டி’ பயிற்சி முகாம்!
களக்காட்டில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் பெண்களுக்கான ‘குழந்தை வளர்ப்பு வழிகாட்டி’ பயிற்சி முகாம்!*
களக்காடு | செப்டம்பர் 20:
நெல்லை மாவட்டம் களக்காட்டில் விமன் இந்தியா மூவ்மெண்ட் (விம்) சார்பில் பெண்களுக்கான 'குழந்தை வளர்ப்பு வழிகாட்டி’ பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. விம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் ரோஷன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொகுதிப் பொருளாளர் மெகுராஜ் பேகம் வரவேற்புரையாற்றினார். களக்காடு நகரச் செயற்குழு உறுப்பினர் நிஷா தொடக்கவுரையாற்றினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விமன் இந்தியா மூவ்மெண்டின் நெல்லை புறநகர் மாவட்டத் தலைவரும், எஸ்டிபிஐ கட்சியின் கவுன்சிலருமான ஜன்னத் ஆலிமா கலந்துகொண்டு சிறப்புப் பயிற்சியளித்தார். இன்றைய நவீன டிஜிட்டல் சூழலில் 'Gen-Z' தலைமுறைக் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து அவர் விளக்கினார். குறிப்பாக, பிள்ளைகளிடம் செல்போன் பயன்பாட்டை எப்படி குறைப்பது என்பது குறித்தும், அவர்களிடம் கல்வி மற்றும் தனித்திறன்களை வளர்ப்பது, தலைமுறை இடைவெளியை அகற்றி குழந்தைகளுடன் நட்புணர்வுடன் உரையாடுவது, மன அழுத்தமின்றி அவர்களைக் கையாள்வது மற்றும் நற்பண்புகளுடன் கூடிய ஒழுக்க நெறிகளை ஊட்டி வளர்ப்பது குறித்த வழிகாட்டுதல்களையும் செயல்முறைப் பயிற்சிகளையும் அவர் வழங்கினார்.
இப்பயிற்சி முகாமில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இறுதியாக, களக்காடு நகரச் செயற்குழு உறுப்பினர் செய்யதலி நன்றியுரையாற்றினார்.
*செய்தி வெளியீடு:*
விமன் இந்தியா மூவ்மெண்ட்
களக்காடு நகரம்,
நெல்லை புறநகர் மாவட்டம்.
tamilanda