தூத்துக்குடியில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பிக்கு திமுக மீனவ சமுதாயத்தினா் உற்சாக வரவேற்பு அனைத்துதலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

in-thoothukudi-members-of-the-dmk-fishing-community-accorded-a-rousing-welcome-to-mp-constantine-ravindran-garlands-were-placed-on-the-statues-of-various-leaders-with-minister-geetha-jeevan-and-mayor-jegan-periyasamy-participating-in-the-event

தூத்துக்குடியில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பிக்கு திமுக மீனவ சமுதாயத்தினா் உற்சாக வரவேற்பு அனைத்துதலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

தூத்துக்குடியில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பிக்கு திமுக மீனவ சமுதாயத்தினா் உற்சாக வரவேற்பு அனைத்துதலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

     தூத்துக்குடி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக புதியதாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டன்டைன் ரவீந்திரன் விமான மூலம் வாகைகுளம் வந்த பின்னா் தூத்துக்குடி மாநகாில் உள்ள 3வது மைலில் பகுதில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் வரவேற்பளித்தனா். 

    பின்னா் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பின்னா் அம்பேத்கர் பெரியார் அண்ணா குரூஸ்பர்னாந்த் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி, காமராஜர், அண்ணா, குரூஸ்பர்னாந்து, வ.உ. சிதம்பரம், ரோச்விக்டோாியா, மற்றும் வ.உ.சி மார்க்கெட் அருகில் உள்ள காமராஜர், கேவிகே சாமி, பீச் ரோட்டில் அமைந்துள்ள இந்திராகாந்தி ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். 

    அதனை தொடா்ந்து பனிமயமாதா பேராலயத்தில் மாதாவை வணங்கினாா். தூத்துக்குடி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயா் ஸ்டீபன் அந்தோணி, மாதா கோவில் பங்குதந்தை ஸ்டாா்வின், ஆகியோாிடம் ஆசி பெற்றக்கொண்டாா். 

    நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளர் அணி துணைசெயலாளர் அன்பழகன், மாநில மீனவரணி துணைச்செயலாளா் புளோரன்ஸ், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத்லைவர் செல்வராஜ், மண்டலதலைவா்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாநில மீனவா் நல வாாிய உறுப்பினா் ஜெபமாலை, மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, மீனவரணி அமைப்பாளா் டேனியல், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மேகநாதன், வட்டச்செயலாளர்கள் கருப்பசாமி, டென்சிங், கதிரேசன், லியோ ஜான்சன், கவுன்சிலா் ரெக்ஸ்லின், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா, பகுதி அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், முத்துகுளித்துறை பரதா் நல சங்க தலைவர் கனகராஜ், பொதுசெயலாளர் ராஜு, பொருளாளர் மிக்கேல், முன்னாள் பேராசிாியா் பாத்திமாபாபு, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், ஜாக்சன், ஜஸ்டின் பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், மற்றும் மணி தங்கசேகா், கமலி உள்பட தூத்துக்குடி கன்னியாகுமாி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மீனவ சங்க நிா்வாகிகள் சமுதாயத்தை சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.