Rotary Club of Tuticorin Trailblazers சார்பில் பசுமைச் சூழல் கருப்பொருளில் கார் பேரணி
மாவட்ட ஆளுநர் Rtn. காந்தி கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் பசுமைச் சூழலை வலியுறுத்தும் கார் பேரணி
ரோட்டரி மாவட்டம் 3212-ன் மாவட்ட ஆளுநர் Rtn. காந்தி கிருஷ்ணன் அவர்களின் தலைமையின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமைச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், Rotary Club of Tuticorin Trailblazers சார்பில் பசுமைச் சூழல் கருப்பொருளில் கார் பேரணி நடைபெற்றது.
இந்த கார் பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி S. பிரியங்கா IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு Rotary Club of Tuticorin Trailblazers தலைவர் Rtn. M. Divya Brightlin தலைமை தாங்கினார். செயலாளர் Rtn. Dr. Rajni Tatia, பொருளாளர் Rtn. Rajeevi Mohanraj ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளராக Rtn. Adv. Sornalatha செயல்பட்டார். சுற்றுச்சூழல் திட்டப் பொறுப்பாளராக Rtn. Hari Ganesh ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார்.
பேரணியில் Rtn. Flora, Rtn. Ayisha, Rtn. Malar, Rtn. Subachini, Rtn. Juana, Rtn. Jovita, Rtn. Ramya, Rtn. Faiz, Rtn. Ajitha உள்ளிட்ட பல ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மேலும், Fisheries College and Research Institute-ன் Eco Club மாணவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை வளர்ப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இப்பேரணி மூலம் “பசுமையை பாதுகாப்போம் – எதிர்காலத்தை வளமாக்குவோம்” என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செய்தி பொதுமக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.
tamilanda