தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைத்து கேன்சர் நோயாளியிடம்,தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்க நகையை திருடி தலைமறைவு போலீஸ் வலை வீச்சு
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனி ஜேசு மேரி மகள் தேவி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் ஆய்வாளரிடம் வழங்கிய புகார் மனுவில் கூறியதாவது நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகின்றேன் இந்த நிலையில் கடந்த 19 /5 /2024 ஆம் அன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நிலையில் எனக்கு சொந்தமான ஆறு பவுன் தங்கத் தாலி செயின் ஒரு பவுன் கைச்செயின் அரை பவுன் கம்மல் அறைபவன் மோதிரம் ஆகிய பொருள்களை எனது அம்மா சேசுமேரி என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு அறுவை சிகிச்சைக்கு சென்று இருந்தேன் இந்த நிலையில் உடல் வேலை பார்த்த நன்கு பழக்கமான ஆறுமுகநேரியை சேர்ந்த அனிதா ரோகினி மற்றும் தூத்துக்குடி பொன்னகரத்தைச் சேர்ந்த ஜெனி ஆகியோர் என்னை பார்க்க மருத்துவமனைக்கு வந்தனர் மேற்படி இருவரும் எனது அம்மாவிடம் கொடுத்து வைத்திருந்த நகைகளை திருடி சென்று விட்டனர் இது தொடர்பான காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தேன் மேற்படி புகார் மனுவிற்கு இரண்டு நபர்களும் நேரில் ஆஜரானார்கள் விசாரணையின் போது மேற்படி எட்டு பவுன் நகையை அருணா ஜுவல்லர்ஸ் கடையில் விற்று விட்டதாக ஒப்புக்கொண்டார்கள் மேலும் ஜெனி என்பவர் அவர் திருடிய நான்கு பவுன் நகையை என்னிடம் ஒப்படைத்து விட்டார் மேலும் ரோகிணி என்ற அனிதா என்பவர் நகையை திருப்பி கொடுப்பதற்கு கால அவகாசம் கேட்டார் இந்த நிலையில் நான் பலமுறை ரோகினி என்ற அனிதாவை நேரில் சென்று கேட்ட பொழுது அவர் என்னை அலைக்கழிக்க விட்டார் தற்சமயம் தமிழக வெற்றி கழகத்தில் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார் ஆகவே அவரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் மனுவில் கூறியிருக்கிறார்
tamilanda