ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தீவிரமாக கட்சிக்கு உழைத்தவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என திமுகவினர், மற்றும் தொகுதி மக்கள் கடும் விரக்தி : உற்சாகத்தில் அமமுக வினர் திமுக தலைமை உடனடியாக பரிசீலனை செய்ய கோரிக்கை வலுக்கிறது !!!

dmk-members-and-constituents-in-the-ottapidaram-assembly-constituency-are-deeply-frustrated-alleging-that-due-recognition-has-not-been-accorded-to-an-individual-who-worked-tirelessly-for-the-party-meanwhile-ammk-members-are-jubilant-calls-are-intensifying-for-the-dmk-leadership-to-immediately-review-this-matter

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தீவிரமாக கட்சிக்கு உழைத்தவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என திமுகவினர், மற்றும் தொகுதி மக்கள் கடும் விரக்தி : உற்சாகத்தில் அமமுக வினர் திமுக தலைமை உடனடியாக பரிசீலனை செய்ய கோரிக்கை வலுக்கிறது !!!

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தீவிரமாக கட்சிக்கு உழைத்தவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என திமுகவினர், மற்றும் தொகுதி மக்கள் கடும் விரக்தி : உற்சாகத்தில் அமமுக வினர் திமுக தலைமை உடனடியாக பரிசீலனை செய்ய கோரிக்கை வலுக்கிறது !!!

தூத்துக்குடி,மார்ச், 29

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம் தேவை எனவும் வேட்பாளர் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவில் அமைந்துள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக- பாஜக கூட்டணி சார்பில் அமமுக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வேட்பாளராக ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள முப்பிலி வெட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். தொகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர் அதே சமயத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக சிட்டிங் எம்எல்ஏ சண்முகையாவிற்கு திமுக தலைமையால் இந்த முறை போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம்  

எம்எல்ஏ சகோதரர் மீது தொடர் புகார் எதிரொலி காரணமாக அவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளதாகவும் திமுக முக்கிய புள்ளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது. அதே சமயத்தில் சண்முகையாவிற்கு சீட் மறுக்கப்பட்டிருந்தாலும் கூட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் குறிப்பாக 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் குடியிருந்து கொண்டு தீவிரமாக கட்சிக்காக உழைத்தவருக்கு உரிய அங்கீகாரம் திமுக தலைமையால் அளிக்கப்படும். என திமுக தொண்டர்கள், தொகுதி மக்கள் பலர் எதிர்பார்த்து இருந்தனர். அதில் குறிப்பாக 1) திமுக ஒன்றிய செயலாளர்

 இளையராஜா, முப்பலிவெட்டி கிராமத்தைச் சார்ந்தவர் 2) காசி விஸ்வநாதன் ஆகியோர் பெயர் பலமாக அடிபட்டது. திமுகவின் கோட்டையாக ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி மாறுவதற்கு திமுகவின் தலைமையின் உத்தரவை உடனுக்குடன் செயல்படுத்தும் வகையில் இரவு பகல் பாராமல் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் குடியிருந்து தீவிரமாக கட்சிக்கு உழைத்தவருக்கு உரிய அங்கீகாரம் வழங்குவார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீர் மாற்றமாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் குடியிருக்காமல் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குள் குடியிருந்தவரும் நபரை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக திமுக தலைமை திடீரென அறிவித்து விட்டதாகவும் அப்படி என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகள் திமுகவிற்கு நெருக்கடி காலகட்டத்திலும் கூட இதே ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் கொள்கையை கிராமம் கிராமமாக கொண்டு சேர்க்கும் வகையிலும், அதன் பிறகு 2021 -26 காலகட்டத்திலும் தனது சொந்த பணத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கு உரிய அங்கீகாரம் 2026 சட்டமன்றத் தேர்தலின் போது கிடைக்கும் என பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து வந்த நிலையில் . ஓட்டப்பிடாரம் தொகுதியில் இல்லாத மற்றொரு தொகுதியில் உள்ள நபர்களுக்கு திமுக தலைமை வேட்பாளராக அறிவித்தது. பல்வேறு தரப்பினர்கள் மத்தியில் 

குமுறல் ஏற்பட்டுள்ளது. ஓட்டப்பிராடம் சட்டமன்ற தொகுதியில் இது கடுமையாக எதிரொலிக்கிறது . குறிப்பாக திமுக தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரை திமுகவின் கோட்டையாக இருந்த இந்த தொகுதி இந்த முறை ஓட்டை விழுந்து விடுமோ என்ற பேச்சு டீக்கடை பெஞ்சில் கேட்க முடிகிறது. அதே சமயத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம் எல் ஏ சுந்தர்ராஜ் தற்போது அதிமுக பாஜக கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் உள்ளூர் வேட்பாளர் எனவும், இவரை தொகுதி மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம் எனவும் அதே சமயத்தில் திமுக வேட்பாளர் வெளியூர் வேட்பாளர் எனவும் தொகுதி மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில் இந்த விஷயத்தில் திமுக தலைமை உடனடியாக பரிசீலனை செய்து திமுகவின் கோட்டையாக விளங்கும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இந்த முறை அதற்கு நேர் மாறாக அமையும் சூழல் உருவாவதற்கு முன்பு தென் மண்டல திமுக பொறுப்பாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் திமுக உயர்மட்ட குழு ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் மறுபரிசலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் திமுகவினர் தற்போது சோர்வடைந்துள்ளதாகவும் அதே சமயத்தில் அதிமுக பாஜக கூட்டணி கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சுந்தர்ராஜ் தரப்பினர் கடும் குசியாகவும் உற்சாகத்திலும் காணப்படுகின்றனர். இதனால் இப்போதே அதிமுக கூட்டணி கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணி தலைவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்யும் சூழ்நிலையில் இந்த தொகுதியை பொருத்தவரையில் மேலும் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட கூடும் என பரபரப்பாக பேசப்படுகிறது திமுக உயர் மட்ட குழு உடனடியாக தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என தொகுதி மக்கள் மற்றும் திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தொகுதி மக்களின் குமுறல்களுக்கு தீர்வு காணுமா?? அல்லது அதிமுக கூட்டணி கட்சிக்கு வெற்றிவாகை கூட வழி வகுக்குமா என்ற பரபரப்பு தற்போது நிலவுகிறது.