தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மீண்டும் மக்கள் பணி தொடரும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மீண்டும் மக்கள் பணி தொடரும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மீண்டும் மக்கள் பணி தொடரும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

     தூத்துக்குடி தமிழகத்தில் 17வது சட்டமன்றத் தேர்தல் தேதி 15.3.2026 அன்று அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 23ம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டு, மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுவடைந்து 234 தொகுதிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். 

      தமிழகம் முழுவதும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் அலுவலகங்கள் மற்றும் அரசு சாா்ந்த செயல்பாடுகளில் தலையீடு இல்லாமல் சுதந்திரமான தோ்தல் நடைபெற வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தால் நடைமுறையிலிருந்த நடைமுறை நேற்று 6ம் தேதி மாலை 6 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டது. இன்று 7 ம் தேதி முதல் வழக்கமான பணிகளை தமிழகத்தில் மேயா்கள் நகா்மன்ற தலைவர்கள் ேபரூராட்சி மன்ற தலைவர்கள் தங்களது மக்கள் பணிகளை தொடங்கவுள்ளனா்.  

      இந்நிலையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி கூறுகையில் கடந்த 50 மாதங்களாக மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுபகுதிகளிலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பாரபட்சமின்றி பணிகளை மேற்கொண்டு வந்தோம். தோ்தல் நடைமுறைக்கு பின்னா் அப்பணி ெதாடராமல் இருந்த நிலையில் தோ்தல் நடைமுறை விலக்கி கொள்ளப்பட்டது. வழக்கம் போல் மக்கள் பணியை தொடங்கியுள்ள நாங்கள் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிதண்ணீாில் எந்த விதமான தடையின்றி சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு தொடங்கப்பட்ட பல சாலை பணிகள் அப்படியே பல பணிகள் நடைபெறாமல் உள்ளது அதை உடனடியாக அந்த சாலை பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளோம். அதேபோல் உலகத்தரம் வாய்ந்த வகையில் அமைக்கப்படுகின்ற நீச்சல் குளம் பணிகளை பார்வையிட்டு விரைவான பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையும், தூத்துக்குடி துறைமுகமும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் பல்வேறு நவீன வசதிகளுடன் உலக தரத்தில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது அந்தப் பணிகளையும் பார்வையிட்டு துரிதப்படுத்தப்படும். மொத்தத்தில் சிலநாட்கள் மக்கள் பணியில் தேர்தல் விதிமுறை காரணமாக ஈடுபடாமல் இருந்த அணைத்து பணிகளையும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் மக்கள் பணியில் ஈடுபட உள்ளோம். திமுக தலைவர் ஸ்டாலின் தனக்கு கொடுத்த பணியை 5 வருட காலம் மக்களுக்காக உழைத்து மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து எனக்கு வாய்ப்பு வழங்கிய திமுக தலைவருக்கும் திமுக விற்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் எனது பணிகள் இருக்கும் என்று மேயர் ஜெகன் கூறியுள்ளாா்.