தூத்துக்குடியில் மாற்றுக்கட்சியினா் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
in-thoothukudi-members-of-other-political-parties-joined-the-aiadmk-in-the-presence-of-former-minister-ct-chellapandian
தூத்துக்குடியில் மாற்றுக்கட்சியினா் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
தூத்துக்குடி மாற்றுக்கட்சியினா் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணியில் இருந்த நிா்வாகிகள் டூவிபுரத்தில் உள்ள மாநில அதிமுக வா்த்தக அணி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வா்்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி தலைமைஏற்று மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் கமலக்கண்ணன் மாவட்ட இணைச்செயலாளா் உமா கண்ணன், மாவட்ட ெதாழிற்சங்க செயலாளர் முத்துப்பட்டன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுதாகா், ஆகியோா் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு சால்வை அணிவித்து அதிமுக வில் இணைந்தனா். அனைவரையும் வரவேற்று சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா். தெற்கு மாவட்ட அதிமுக துணைச்செயலாளர் சந்தனம் வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளா் ஜீவா பாண்டியன் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் மேலூா் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், தெற்கு மாவட்ட வா்த்தக அணி செயலாளா் துரைசிங், முன்னாள் கவுன்சிலா் அகஸ்டின், மற்றும் கேடிசி சங்கா், ஐயப்பன், உள்பட பலா் உடனிருந்தனா்.
tamilanda